சன் டிவி சீரியலில் இருந்து அண்மையில் விலகிய நடிகை ஒருவர், தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சி 20 நாட்களைக் கடந்த போதிலும் இன்னும் ஆட்டம் சூடுபிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனால் உஷாரான பிக்பாஸ் டீம், மூன்றாவது வார இறுதியில் வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளனர். அவர்களின் எண்ட்ரிக்கு பின்னர் ஆட்டத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள போட்டியாளர்கள் பற்றிய அப்டேட் வெளிவந்த வண்ணம் உள்ளது.
24
சன் டிவி சீரியலில் இருந்து விலகிய நடிகை
அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக சீரியல் நடிகை ஒருவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேறுயாருமில்லை நடிகை திவ்யா கணேஷ் தான். இவர் சன் டிவியின் அன்னம் சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார். அவருக்கு பதில் பிரியங்கா அந்த சீரியலில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த நிலையில், நடிகை திவ்யா கணேஷ் திடீரென அன்னம் சீரியலில் இருந்து விலகியதே, அவர் பிக் பாஸுக்காக தான் என கூறப்படுகிறது. பிக் பாஸில் வைல்டு கார்டு போட்டியாளராக திவ்யா கணேஷ் கலந்துகொள்ள உள்ளாராம்.
34
பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் திவ்யா கணேஷ்
இவர் இதற்கு முன்னர் விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியலில் கம்ருதீனுக்கு ஜோடியாக சில எபிசோடுகளில் நடித்திருந்தார் திவ்யா கணேஷ். அதிலிருந்தும் அவர் விலகிவிட்டார். தற்போது பிக் பாஸில் ஏற்கனவே கம்ருதீன் மற்றும் ஆதிரை என இரு மகாநதி சீரியல் பிரபலங்கள் உள்ள நிலையில், மூன்றாவதாக திவ்யா கணேஷும் எண்ட்ரி கொடுக்க உள்ளதால், ஆட்டம் சூடுபிடிக்க வாய்ப்பு உள்ளது. ஒரே சீரியலில் நடித்திருந்தாலும் கம்ருதீனும், ஆதிரையும் எலியும் பூனையுமாக சண்டை போட்டு வருகிறார்கள். திவ்யாவின் எண்ட்ரிக்கு பின் மோதல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திவ்யா கணேஷ் மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக செல்ல உள்ள மற்றுமொரு நடிகர் என்றால் அது பிரஜன் தான். இவரும் சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார். இதுதவிர ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் சீரியலில் நடித்து வந்த சிபு சூரியனும் அண்மையில் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். அதனால் அவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. புது வரவுகளினால் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்குமா என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டும்.