பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை பிரவீன் காந்தி மற்றும் அப்சரா ஆகியோர் இதுவரை எலிமினேட் ஆகி உள்ள நிலையில், இந்த வார எலிமினேஷன் யார் என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 8 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து அவர் விலகியதால், அவருக்கு பதில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பொறுப்பேற்றார். அவர் 8-வது சீசன் முதல் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த சீசன் ஹிட் ஆனதை தொடர்ந்து 9-வது சீசனிலும் அவரே தொகுப்பாளராக தொடர்கிறது. இந்த சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே மந்தமாக சென்றுகொண்டிருப்பதால் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
24
பிக் பாஸில் காமெடிக்கு பஞ்சம்
நிகழ்ச்சி மீது ஆர்வத்தை கூட்ட பிக் பாஸ் குழுவினரும் ஏதேதோ டாஸ்கெல்லாம் கொடுத்துப் பார்க்கிறார்கள். ஆனால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இந்த சீசனில் கமெடிக்கும் கடும் பஞ்சம் இருந்தது. இடையே வினோத் மற்றும் திவாகர் இருவரும் செந்தில் - கவுண்டமணி போல் எலியும் பூனையுமாக இருந்து செய்த காமெடிகள் ரசிக்கும்படி இருந்தன. ஆனால் கடந்த வாரம் அவர்களின் காமெடி வைரலான விஷயத்தை விஜய் சேதுபதியே போட்டுடைத்ததால், தற்போது அவர்கள் இருவரும் கடுப்பேற்றும் விதமாக காமெடி செய்து வருகிறார்கள்.
34
நாமினேஷனில் சிக்கியது யார்... யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரூல்ஸ் படி, வார வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வார இறுதியில் வெளியேற்றப்படுவார். இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இந்த வார நாமினேஷனில் வியானா, பிரவீன், சுபிக்ஷா, துஷார், கலை, ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை ஆகியோர் சிக்கி இருந்தனர். இவர்களில் வியானா அதிகபட்ச வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிரவீன் ராஜ், சுபிக்ஷா, துஷார் மற்றும் கலையரசன் ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்று தப்பி உள்ளனர்.
இறுதியாக ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரை தான் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் மூவரில் மிகவும் கம்மியான வாக்குகளை பெற்றுள்ள போட்டியாளர் என்றால் அது ஆதிரை தான். அவரைவிட 2 ஆயிரம் வாக்குகள் அரோரா அதிகம் பெற்றுள்ளதால், இந்த வாரம் ஆதிரை எலிமினேட் ஆக அதிகம் வாய்ப்பு உள்ளது. பிக் பாஸ் வீட்டில் சண்டைக் கோழியாக இருந்து வந்த ஆதிரை, முதல் வாரத்தில் இருந்தே போட்டியாளர்களுடன் சண்டை போட்டு வந்ததால், அவருக்கான மவுசும் குறையத் தொடங்கியது. அதனால் மக்கள் அவரை வெளியேற்ற முடிவெடுத்து உள்ளனர்.