அவசர அவசரமாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் - அடடே இவங்கதானா?

Published : Oct 18, 2025, 12:29 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் களமிறக்கப்பட்ட போட்டியாளர்கள் சொதப்பி வருவதால், நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க அதிரடியாக வைல்டு கார்டு போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்ப உள்ளார்களாம்.

PREV
14
Bigg Boss Tamil Wild Card Contestants

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 20 போட்டியாளர்களில் இருவர் வெளியேற்றப்பட்டு தற்போது 18 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். அவர்களிடையே தான் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சீசனிலும் இரண்டு வீடாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிக் பாஸ் வீடு, சூப்பர் டீலக்ஸ் வீடு என இரண்டு வீடுகள் உள்ளன. இதில் சூப்பர் டீலக்ஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு சகல வசதிகளும் கிடைக்கும், அதேவேளையில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தான் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டும்.

24
பரபரப்பில்லாத பிக் பாஸ்

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஏதாவது ஒரு சர்ச்சை தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும். ஆனால் இந்த சீசனில் அதுபோன்ற சர்ச்சைகள் எதுவும் இல்லாததால், விறுவிறுப்பின்றி மிகவும் மந்தமாக சென்றுகொண்டிருக்கிறது. போட்டியாளர்களும் எதிர்பார்த்தபடி இல்லாததால், இந்த சீசன் தற்போது வரை சுமாரான ஒன்றாகவே சென்று கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் அதள பாதாளத்துக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் தற்போது அதிரடி முடிவு ஒன்றை பிக் பாஸ் டீம் எடுத்துள்ளது.

34
வைல்டு கார்டு எண்ட்ரி

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி டல் அடித்தால், அதற்கு ஹைப் ஏத்த அவர் பயன்படுத்தும் ஆயுதம் வைல்டு கார்டு எண்ட்ரி. அந்த வகையில், கடந்த சில வருடங்களாகவே முதல் மாத இறுதியில் வைல்டு கார்டு போட்டியாளர்களை கொத்தாக உள்ளே அனுப்பி வருகிறார்கள். அதில் 7-வது சீசனில் உள்ளே சென்ற வைல்டு கார்டு போட்டியாளரான அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார். டைட்டில் ஜெயித்த முதல் வைல்டு கார்டு போட்டியாளர் அர்ச்சனா தான். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைல்டு கார்டு போட்டியாளர் பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

44
யார் அந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள்?

அதன்படி இந்த சீசனில் மூன்றாவது வாரத்திலேயே வைல்டு கார்டு எண்ட்ரி இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி, பிரபல நட்சத்திர ஜோடியான பிரஜன் மற்றும் சாண்ட்ரா தான் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே வர உள்ளார்களாம். பிரஜன், சாண்ட்ரா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர். அதுமட்டுமின்றி இருவருமே சீரியலில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஜோடியாக உள்ளே வந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கு முன்னர் 2வது சீசனில் தாடி பாலாஜி மற்றும் நித்யா ஜோடியாக பிக் பாஸில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories