பிக்பாஸ் தொகுப்பாளராக போட்டிபோடும் ‘ரெளடி ஜோடி’ - கமல் இடத்தை பிடிக்கப்போவது யார்?

First Published | Aug 11, 2024, 2:38 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இருந்து கமல் விலகிய நிலையில், அவரது இடத்தைப்பிடிக்க கடும் போட்டி நடைபெற்று வருகிறதாம்.

Kamalhaasan

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டு மக்களிடையே பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான். அவர் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம், அவரின் நடுநிலையான தீர்ப்பு ஆகியவை ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இதன் காரணமாக இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி இருந்தார். அதேபோல் விரைவில் தொடங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

Kamal quits Biggboss

ஆனால் அதில் திடீர் ட்விஸ்டாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக ஒரு குண்டை தூக்கிப்போட்டார் கமல்ஹாசன். சினிமாவில் செம்ம பிசியாக உள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாது என கனத்த இதயத்தோடு அறிவித்து விடைபெற்றார் கமல்ஹாசன். ஆண்டவரே ஆப்செண்ட் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன ஆகுமோ என்கிற கேள்வி ஒரு புறம் இருக்க, மறுபுறம் அடுத்த தொகுப்பாளரை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... கர்ணனாக மாறி... வயநாடு மக்களுக்கு நிவாரண நிதியை வாரி வழங்கிய தனுஷ்... அதுவும் இவ்வளவா?

Tap to resize

vijay sethupathi

கமலுக்கு பதில் இதுவரை தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது சிம்பு மற்றும் ரம்யா கிருஷ்ணன் தான். அதில் சிம்பு ஓடிடிக்காக நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கினார். ரம்யா கிருஷ்ணன், கமலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது ஒரு எபிசோடு மட்டும் வந்து தொகுப்பாளராக தலைகாட்டிவிட்டு சென்றார். ஆனால் இவர்கள் இருவரையுமே பிக்பாஸ் டீம் தற்போது அணுகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Nayanthara

அவர்களின் லிஸ்ட்டில் இருக்கும் நபர்கள் இரண்டு பேர், ஒன்று விஜய் சேதுபதி, மற்றொன்று நயன்தாரா. நானும் ரெளடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த இவர்கள் இருவருக்கும் இடையே தான் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யார் என்கிற போட்டி நிலவுகிறது. விஜய் சேதுபதி இதற்கு முன்னரே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால் நயன்தாரா இதுவரை எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை என்றாலும் அவர் சினிமாவுக்கு வரும் முன்னர் தொகுப்பாளினியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. அது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... இரண்டாவது திருமணம்... சமந்தாவின் முடிவு என்ன? அவரே அளித்த சூசக பதில் இதோ

Latest Videos

click me!