சூர்யாவும் இல்ல, விஜய் சேதுபதியும் இல்ல; பிக்பாஸில் கமல் இடத்தை Replace செய்யப்போவது யார்? லேட்டஸ்ட் அப்டேட்

Published : Aug 08, 2024, 12:44 PM ISTUpdated : Aug 08, 2024, 12:46 PM IST

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை தொகுத்து வழங்கும் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துவிட்டார்.

PREV
14
சூர்யாவும் இல்ல, விஜய் சேதுபதியும் இல்ல; பிக்பாஸில் கமல் இடத்தை Replace செய்யப்போவது யார்? லேட்டஸ்ட் அப்டேட்
Kamalhaasan

பிக்பாஸ் நிகழ்ச்சி வட இந்தியாவில் பேமஸ் ஆனதை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், நானி, நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அதேபோல் கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் மலையாளத்தில் மோகன் லாலும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

24
Biggboss Kamalhaasan

தென்னிந்திய மொழிகளில் மற்றவற்றை காட்டிலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வந்தது. அதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம். மக்களின் குரலாக அவர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை போட்டியாளர்களிடம் பட்டென கேட்டுவிடுவார். அப்படி இருந்த கமல், கடந்த சீசனில் எடுத்த சில முடிவுகள் தவறாகி அது அவருக்கே அவப்பெயரை ஏற்படுத்தின.

இதையும் படியுங்கள்... சமந்தாவின் அக்காவை தான் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா நாக சைதன்யா? இதென்ன புது கதையா இருக்கு!

34
Kamalhaasan quits BiggBoss

இதனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கமாட்டார் என கூறப்பட்டு வந்தது. அதன்படியே தான் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கமல் அறிவித்தார். சினிமாவில் பிசியாக உள்ளதால் பிக்பாஸுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்திருந்தார் கமல். அவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரது கேள்வியாக இருந்தது, யார் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் என்பது தான்.

44
Sarathkumar Replace Kamalhaasan

கடந்த சில நாட்களாக நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் சோசியல் மீடியாவில் அடிபட்டன. ஆனால் அதெல்லாம் வதந்தி என பின்னர் தெரியவந்தது. லேட்டஸ்ட் தகவலின் படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் தொகுப்பாளராக நடிகர் சரத்குமார் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறதாம். அது உறுதியானால் மீண்டும் நாட்டாமை மோடுக்கு மாறிவிடுவார் சரத்குமார்.

இதையும் படியுங்கள்... நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தாவை விட இளையவர் சோபிதா.! அடேங்கப்பா இத்தனை வயசு வித்தியாசமா?

Read more Photos on
click me!

Recommended Stories