பிக்பாஸ் வர முடியாத அளவுக்கு பிசியா? அப்படி எத்தனை படங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்? அவரின் லைன் அப் இதோ

First Published | Aug 7, 2024, 7:55 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ள கமல், படங்களில் பிசியாக உள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறி உள்ளார்.

kamal quits Bigg Boss

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டு மக்களிடையே பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான். அந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கான முதல் ரீச் கொடுத்தது கமல் தொகுத்து வழங்கும் விஷயம் தான். இதன் காரணமாகவே கடந்த 7 சீசன்களாக கமல்ஹாசன் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடர்ந்து பயன்படுத்தி வந்தது விஜய் டிவி. ஆனால் கடந்த சீசனில் அதிகளவிலான சர்ச்சைகளிலும் சிக்கினார் கமல்ஹாசன்.

kamalhaasan movie Line Up

குறிப்பாக பிரதீப் ஆண்டனியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய விஷயம் அவருக்கு பின்னடைவாக அமைந்தது. இதனால் கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தார் ஆண்டவர். இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டார் கமல்ஹாசன். அதில் தனக்கு சினிமாவில் இருக்கும் கமிட்மெண்ட் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தொகுத்து வழங்க முடியவில்லை என கூறினார்.

Tap to resize

Thug Life

தக் லைஃப்

அப்படி என்னென்ன படங்களை கமல் கைவசம் வைத்திருக்கிறார் என்பதை பார்க்கலாம். கமல்ஹாசன் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். சிம்பு, கமல், அசோக் செல்வன் ஆகியோர் நடிக்க மல்டி ஸ்டாரர் படமாக தக் லைஃப் தயாராகி வருகின்றது. அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி தயாரித்தும் வருகிறார் கமல்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் : "கனத்த இதயத்தோடு எடுத்த முடிவு இது" பிக் பாஸில் இருந்து விலகிய கமல்ஹாசன் - என்ன காரணம்!

Kamal, Lokesh Kanagaraj

விக்ரம் 2

அவர் கைவசம் உள்ள மற்றொரு படம் விக்ரம் 2. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். ரஜினிகாந்தின் கூலி மற்றும் கார்த்தியின் கைதி 2 படங்களை முடித்த பின்னர் அவர் விக்ரம் 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

Kamal with Anbarivu

அன்பறிவு இயக்கும் படம்

இதுதவிர, புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவு இயக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ளார் கமல்ஹாசன். இப்படத்தையும் கமல் தான் தயாரிக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு முதல் ஷூட்டிங் நடைபெற உள்ளது.

Kalki 2898AD part 2

கல்கி 2

கமலின் லைன் அப்பில் உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் கல்கி 2. இப்படத்தின் முதல் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தில் யாஷ்கின் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கமல். அதன் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங்கும் விரைவில் தொடங்க உள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு அதிகம் ஸ்கோப் இருக்கும் என கூறப்படுகிறது.

Indian 3

இந்தியன் 3

அதேபோல் இந்தியன் 3 படமும் கமலின் கைவசம் இருக்கிறது. அப்படத்தின் இரண்டாம் பாகம் பிளாப் ஆனாலும் இந்தியன் 3 படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்கிற நம்பிக்கையில் உள்ளார் கமல்ஹாசன். அதன் ஷூட்டிங் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால் இன்னும் ஆறு மாதங்களில் இந்தியன் 3 படம் ரிலீசாக உள்ளது. அதன் புரமோஷன் பணிகளும் இருப்பதால் கமல் பிக்பாஸ் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசனின் பிக்பாஸ் விலகலுக்கு பின்னணியில்... தளபதியின் அரசியல் நகர்வு? வேற வழியே இல்லாமல் எடுத்த முடிவு!

Latest Videos

click me!