பிக்பாஸ் முடிந்தும் தொடரும் பகை... வெளியிலும் ஏ டீம்; பி டீம் ஆக சுற்றும் போட்டியாளர்கள் - வைரலாகும் போட்டோஸ்

First Published | Jan 18, 2024, 4:18 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பார்ட்டி பண்ணி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இதுவரை நடந்து முடிந்த சீசன்களிலேயே வித்தியாசமான சீசனாக அமைந்தது. ஏனெனில் இந்த சீசனில் முதன்முறையாக இரண்டு வீடுகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால் பிக்பாஸ், சுமால் பாஸ் என பிரிக்கப்பட்டு புது விதிமுறைகளும் போடப்பட்டன.

இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த சண்டைகள் சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறின. குறிப்பாக அடிப்படை கல்வி குறித்து முதல் வாரத்திலேயே ஜோவிகா - விசித்ரா இடையே நடந்த சண்டை மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

Tap to resize

இப்படி பல்வேறு சண்டை, சச்சரவுகளுடன் ஒருவழியாக முடிவுக்கு வந்தது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, இந்த சீசனில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக்பாஸ் வரலாற்றிலேயே வைல்டு கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளர் அர்ச்சனா தான்.

இதையும் படியுங்கள்... Vishal Help: பொதுமக்கள் வைத்த கோரிக்கை..! கில்லியாக மாறி நிறைவேற்றிய விஷால்... குவியும் வாழ்த்து!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே ஏ டீம், பி டீம் என இரு பிரிவுகளாக இருந்து வந்தனர். மாயாவின் புல்லி கேங் என சொல்லப்படும் ஜோவிகா, பூர்ணிமா, விசித்ரா, நிக்சன், கானா பாலா, அக்‌ஷயா, சரவண விக்ரம் ஆகியோர் பிக்பாஸின் ஏ டீமில் உள்ளனர்.

அதேபோல் பி டீமில் விஷ்ணு, பிராவோ, தினேஷ், மணிச்சந்திரா, அர்ச்சனா, கூல் சுரேஷ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது தான் இந்த பிரிவினை என்று பார்த்தால் வெளியே வந்தும் இது தொடர்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிராவோ மற்றும் விஷ்ணு விஜய் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அவுட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். இவர்களுக்கு போட்டியாக மாயா, ஜோவிகா, கானா பாலா ஆகியோர் வனிதா வீட்டில் பார்ட்டி பண்ணியபோது எடுத்த போட்டோக்களை பகிர்ந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... விஜயகாந்த் இடத்தை விஜய் சேதுபதி Replace செய்துவிட்டார்... அடுத்த கேப்டன் என புகழ்ந்த பிரபல தயாரிப்பாளர்

Latest Videos

click me!