பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகப்போகும் போட்டியாளர் பற்றிய தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான கிராண்ட் பினாலே நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெற்றிகரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ச்சனா, மாயா, தினேஷ், விஷ்ணு, மணி ஆகிய ஐந்து பேர் தான். இவர்களில் ஒருவர் தான் இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட உள்ளனர்.
24
Bigg Boss Finalists
மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை அர்ச்சனா முதலிடத்திலும், மாயா இரண்டாவது இடத்திலும் இருந்து வந்தார். ஆனால் கடந்த இரு தினங்களாக மணிச்சந்திராவுக்கு வாக்குகள் வேகமாக குவிந்து வருகிறது. இதற்கு ரவீனாவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அவர் வெளியே இருந்து மணிக்காக வாக்கு சேகரிப்பில் இறங்கினாராம்.
இதனால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட மாயா, தற்போது அந்த இடத்தையும் இழந்துள்ளார். அவரை விட அதிக வாக்குகள் பெற்று தினேஷ் மூன்றாவது இடத்துக்கு சென்றிருக்கிறார். இதனால் பைனல் மேடையில் இடம்பெற உள்ள இருவரில் அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அதிலும் அர்ச்சனா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் அவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
44
Bigg Boss Tamil season 7 Title Winner
இந்த சீசன் முழுக்க மாயாவுக்கு கமல்ஹாசனின் ஆதரவு இருந்து வந்தது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. இதனால் இறுதிப்போட்டியில் கமல் நினைத்தால் ரிசல்ட் தலைகீழாக மாறி மாயாவுக்கு டைட்டில் கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என நெட்டிசன்கள் ஒருபுறம் புலம்பி வருகின்றனர். இதனால் டைட்டிலை ஜெயித்து ரூ.50 லட்சம் பரிசுத் தொகையையும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் தட்டிச் செல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.