வத்திக்குச்சி வனிதா பொண்ணுனா சும்மாவா! கொளுத்திப்போட்ட ஜோவிகா... பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வெடிக்கும் மோதல்?

First Published | Jan 11, 2024, 9:27 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கெஸ்டாக உள்ளே சென்றுள்ள வனிதாவின் மகள் ஜோவிகா, போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிடும் விதமாக பேசி உள்ளார்.

Vanitha Daughter Jovika

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பைனலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் விசித்ரா எலிமினேட் ஆன நிலையில், விஷ்ணு விஜய், மாயா, மணிச்சந்திரா, விஜய் வர்மா, தினேஷ், அர்ச்சனா ஆகிய 6 பேர் மட்டுமே இறுதி வாரத்தில் இருந்தனர். இவர்களில் நேற்று நடந்த மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் டாப் 5 போட்டியாளர்களான மாயா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் அர்ச்சனா ஆகியோர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

Maya, Jovika

வழக்கமாக பிக்பாஸ் வீட்டின் இறுதி வாரத்தில் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது உண்டு. அந்த வகையில் இந்த சீசன் ஒவ்வொரு நாளும் மூன்று போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் அக்‌ஷயா, வினுஷா மற்றும் அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே சென்றனர். நேற்று சரவண விக்ரம், கூல் சுரேஷ் மற்றும் ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தனர்.

இதையும் படியுங்கள்... மோசமடைந்த உடல்நிலை... ஒரு வாரமாக ஐசியூவில் சிகிச்சை - நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு என்ன ஆச்சு?

Tap to resize

Dinesh, Jovika

இந்த நிலையில், இன்று முதல் ஆளாக வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அவர் உள்ளே சென்றதும் போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிடும் வகையில் பேசி உள்ள புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது. முதலில் தினேஷிடம் பேசும் ஜோவிகா, நீங்கள் தனியாக விளையாடுவது போல் தெரியவில்லை. நீங்கள் மூன்று பேரும் ஒரு குரூப் போலவே தெரிகிறது. தினேஷைப் பற்றி தனியா பேசும்படி எதுவுமே நடக்கவில்லை என சொல்கிறார்.

Bigg boss Jovika

இதையடுத்து மாயாவிடம் சென்று பேசிய ஜோவிகா, உங்க மேல ஒரு கோபம் இருப்பதாக கூறுகிறார். அர்ச்சனா எங்க எல்லாரையும் என்னென்ன பேசுனாங்க. இப்போ நீங்க அவங்க கூடவே கட்டிப் புரண்டுகிட்டு இருக்கீங்க. சத்தியமா சொல்றேன் நீங்க மட்டும் இந்த சீசன்ல இல்லேனா இந்த சீசன் வேஸ்ட் என கொளுத்திப்போட்டுள்ளார். அர்ச்சனா - மாயா இடையே சண்டையை மூட்டிவிடும் ஜோவிகா பேசி உள்ளதால் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் ஜோவிகாவின் இந்த செயலை பார்த்ததும் எல்லாம் வனிதாவோட டிரெயினிங்காக இருக்கும் என விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... என்னோட வெற்றிக்கு பின்னாடி என் கணவர் இருக்கிறார்... விக்கி பற்றி பேசுகையில் வெட்கத்தில் முகம் சிவந்த நயன்தாரா

Latest Videos

click me!