பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற ஜனவரி 14-ந் தேதியோடு முடிவடைய உள்ளது. மற்ற சீசன்களை விட இந்த சீசனில் பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி தற்போது மாயா, விஷ்ணு, தினேஷ், மணிச்சந்திரா, அர்ச்சனா ஆகிய 5 பேர் இறுதி வரை சென்றுள்ளனர். இவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
24
Vijay Varma
பிக்பாஸ் என்றாலே எதிர்பாராத்தை எதிர்பாருங்கள் என்கிற டேக் லைனுடன் கூட ஷோ என்பதால், இதில் அதற்கேற்றார் போல் பல்வேறு சம்பவங்களும் திடீர் திடீரென அரங்கேறும். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறினார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மிட் வீக் எவிக்ஷன் பிக்பாஸ் வீட்டில் நடந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று நடைபெற்ற மிட் வீக் எவிக்ஷனில் விஷ்ணு விஜய் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்தவர் விஷ்ணு தான். அவர் எப்படியாவது டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்து வந்தார். ஆனால் அவரின் கனவை தவிடுபொடியாக்கும் வகையில் இந்த மிட் வீக் எவிக்ஷன் அமைந்துள்ளது.
44
Ticket To Finale Winner Vishnu
பிக்பாஸ் வரலாற்றி மிட் வீக் எவிக்ஷனில் இதுவரை டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் கூட பைனலில் டைட்டில் வின்னர் ஆனதில்லை. அதே டிரெண்ட் தற்போது இந்த சீசனிலும் தொடர்கிறது. இதனால் எஞ்சியுள்ள மாயா, தினேஷ், மணி, அர்ச்சனா ஆகிய நால்வரில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.