பிக்பாஸ் தமிழ் சீசன் 8 க்கு ஆள் சேர்க்கும் பணி தீவிரம்! தூள் கிளப்பப் போகும் போட்டியாளர்கள்!

First Published | Jul 17, 2024, 11:16 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போவது யார் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் கண்டிப்பாக இந்த சீசனில் இருப்பார்கள் என்ற தகவலும் கசிந்து வருகிறது.

Bigg Boss Tamil 8

பல விமர்சனங்களைச் சந்தித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த முறையும் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் சமீபத்தில் முடிந்த சில சீசன்கள் டல்லாக இருந்ததாக விமர்சனங்கள் வந்துள்ளன.

Bigg boss Tamil Season 8

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் குழு இந்த முறை போட்டியாளர்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறது. இன்னும் சில மாதங்கள் நிகழ்ச்சி தொடங்கவுள்ளதால் போட்டியாளர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tap to resize

Amala Shaji

மலையாள பிக்பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராகக் கலந்துகொண்ட அமலா ஷாஜி இந்த முறை பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக வர அதிக வாய்ப்பு உள்ளது என விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். பல சர்ச்சைகளில் சிக்கி ட்ரெண்டிங்கில் இருக்கும் அவருக்கு தமிழ்நாட்டிலும் நிறைய ரசிகர்கள் என்பதால் அவர் நிச்சயம் நல்ல சாய்ஸ் என்று பிக்பாஸ் குழுவில் உள்ளவர்கள் நினைக்கிறார்களாம்.

Youtuber TTF Vasan and Shalin Zoya

இளம் சர்ச்சை புயலாக மாறியுள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசன் போலீஸ், கோர்ட் என்று அலைந்து செய்திகளில் அடிபட்டுக்கொண்டே இருக்கிறார். ஐபிஎல் என்ற சினிமாவிலும் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அவரது காதலி ஷாலின் ஜோயாவுடன் டி.டி.எஃப். வாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்க்கலாம் என்று பரிசீலனை நடக்கிறதாம்.

Ma Ka Pa anandh

விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான மாகாபா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளராக நுழையலாம் என்றும் சொல்கிறார்கள். ஒவ்வொரு சீசனிலும் விஜய் டிவி தொகுப்பாளர் ஒருவரை இழுத்து உள்ளே போடுவது வழக்கமாக இருக்கிறது.  இதற்கு முன்னால் பிரியங்கா போட்டியாளராக வந்தபோது பிக்பாஸ் வீட்டையே கலக்கியது போல, மாகாபா ஆனந்த் சீசனையே கலகலப்பாக வைத்திருப்பார் என்று கணக்குப் போடுகிறார்கள்.

சன் டிவியில் வரும் டாப் குக் டூப்பு குக் நிகழ்ச்சியின் போட்டியாளரான சோனியா அகர்வால் இப்போது பல படங்களில் கமிட் ஆகி பிசியாக இருக்கிறார். ஒவ்வொரு சீசனுக்கு முன்பும் அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டுவர பிளான் போடுகிறார்களாம். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கிரணைச் சேர்க்கவும் முயற்சி நடக்குதாம்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி சினிமாவுக்குச் சென்றவர் ரோபோ சங்கர். அவரைச் பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக அழைக்க வாய்ப்பு உள்ளது. அவருக்குப் பதிலாக அவரது மகள் இந்திரஜா சங்கர் வருவதற்கும் சான்ஸ் இருக்கிறதாம். ஆனால், அதிகாரபூர்வமாக போட்டியாளர்கள் விவரம் எப்போது் தெரியும் என்றுதான் பிக்பாஸ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Latest Videos

click me!