அதில் 7 ஆண்டுகளாக ஈடு இணையில்லாத பங்களிப்பை கொடுத்த கமல் சாருக்கு நன்றி, நீங்கள் ஆடியன்ஸோடு மட்டுமல்லாமல், போட்டியாளர்களிடமும் பேசி அவர்களிடம் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வந்தீர்கள். அதனால் தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தியாவில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுப்பதாக நீங்கள் அறிவித்திருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.