ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன பலூன் அக்கா... இந்த வார பிக் பாஸ் எலிமினேஷனில் ட்விஸ்ட் - வெளியேறியது இவரா?

Published : Oct 18, 2025, 04:04 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் கம்மியான வாக்குகளை வாங்கிருந்த பலூன் அக்கா அரோரா ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆனதால், அவருக்கு பதில் யாரும் எதிர்பாராத போட்டியாளர் எலிமினேட் ஆகி உள்ளார்.

PREV
14
Bigg Boss This Week Elimination

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் சினிமாவில் பிசியானதால், பிக் பாஸை விட்டு விலகுவதாக கடந்த சீசன் தொடங்குவதற்கு முன் அறிவித்ததை அடுத்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக் பாஸ் தொகுப்பாளராக பொறுப்பேற்று 8வது சீசனை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் சீசன் 8 சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் அதன் 9-வது சீசனை தொகுத்து வழங்கும் பொறுப்பும் விஜய் சேதுபதியிடமே வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சீசனைக் காட்டிலும் இந்த சீசனில் சற்று கராராக நடந்து கொள்கிறார் என்கிற விமர்சனம் விஜய் சேதுபதி மீது வைக்கப்படுகிறது.

24
விமர்சிக்கப்படும் விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வீக் எண்டு எபிசோடில், ஒவ்வொருவரின் பெயராக கேட்கும் போது ஆதிரை மட்டும் அமர்ந்தபடியே தன் பெயரை சொன்னார். இதனால் டென்ஷன் ஆன விஜய் சேதுபதி, அவரை எழுந்து நின்று சொல்ல முடியாதா என கோபமாக கேட்டார். அதற்கு அவர் அதுனால என்ன சார், அது என்னோட விருப்பம் தான என பதிலுக்கு பேச, அந்த விவகாரம் பேசு பொருள் ஆனது. அதில் விஜய் சேதுபதியை ஏராளமானோர் விமர்சித்தனர். கடந்த வாரம் எலிமினேட் ஆன பிரவீன் காந்தி கூட, விஜய் சேதுபதி, அனைவரையும் ரோஸ்ட் செய்யும் மனநிலையிலேயே இருப்பதாக பேட்டிகளில் கூறினார்.

34
இந்த வார நாமினேஷன்

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் பிரவீன் காந்தி எலிமினேட் ஆன நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷனில், திவாகர், கம்ருதீன், ரம்யா ஜோ, சபரிநாதன், எஃப் ஜே, அரோரா, அப்சரா, கெமி, விஜே பார்வதி ஆகியோர் இடம்பெற்று இருந்த நிலையில், நேற்று வரை அரோரா தான் கம்மியான வக்குகளை வாங்கி இருந்தார். இதனால் இந்த வாரம் பலூன் அக்காவை தான் வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் பிக் பாஸ் குழுவினர் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.

44
வெளியேறியது யார்?

அதன்படி இந்த வாரம் ஜஸ்ட் மிஸ்ஸில் பலூன் அக்கா அரோரா தப்பி இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக திருநங்கை போட்டியாளரான அப்சரா சிஜே எலிமினேட் செய்யப்பட்டு உள்ளார். பிக் பாஸ் வீட்டில் கண்டெண்டே கொடுக்காமல் சைலண்டாகவே இருந்து வந்ததால் அப்சராவை எலிமினேட் செய்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அரோரா கம்மியான ஓட்டு வாங்கினாலும் அவரால் லவ் டிராக் பிக் பாஸ் வீட்டில் ஓடிக் கொண்டிருப்பதால், இனி வரும் நாட்களில் நல்ல கண்டெண்டும், கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அவருக்கு பதில் அப்சராவை எலிமினேட் செய்திருப்பார்கள் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories