உன் போதைக்கு நான் ஊறுகாயா? பிக் பாஸ் வீட்டில் கம்ருதீன் செய்யும் லீலைகளை லிஸ்ட் போட்டு சொன்ன பார்வதி..!

Published : Oct 28, 2025, 02:07 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கம்ருதீன் மீது விஜே பார்வதி வைத்துள்ள குற்றச்சாட்டால், அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

PREV
14
VJ Parvathy Allegation Against Kamrudin

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் கம்ருதீன் மற்றும் விஜே பார்வதி இருவரும் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் அதிகம் விமர்சனத்துக்குள்ளானது இவர்கள் இருவர் தான். அதிலும் கம்ருதீனுக்கு இனி ஏதாவது பிரச்சனை செய்தால் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விடுவோம் என மக்கள் செல்வன் விஜய் சேதுபதியே வார்னிங் கொடுத்திருந்தார். அப்படி இருக்கையில், தற்போது பெண்களிடம் கம்ருதீன் அத்துமீறுவதாக அவரின் தோழியான பார்வதியே பரபரப்பு புகார் ஒன்றை கூறி இருப்பது பேசு பொருள் ஆகி இருக்கிறது.

24
பார்வதி சொன்னதென்ன?

கார்டன் ஏரியாவில் உள்ள சோபாவில் திவாகருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அண்ணேன் கம்ருதீன் நேத்து ஒரு வேலையை பார்த்துவிட்டான் என கூறுகிறார் பார்வதி. அவன் ஒரே நேரத்தில் 2 பெண்களை மடக்க முயற்சிப்பதாக கூறி உள்ளார். அத்துமீறி தொடுகிறார் என்பது எனக்கே ஃபீல் ஆகுது. நான் யாரிடமாவது டேட்டிங் செய்தால் கமிட்மெண்டோடு தான் செய்வேன். உன்னுடைய போதைக்கு நீ என்னை ஊறுகாயா பயன்படுத்திக்க முடியாது. கொஞ்சம் எல்லைமீறி தான் நடந்துகொள்கிறான் என சொல்வதோடு, அவன் எந்த வகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என கூறி அதிர வைத்துள்ளார் பார்வதி.

34
ஆக்‌ஷன் எடுப்பாரா பிக் பாஸ்?

பிக் பாஸ் வீட்டில் இதுபோன்று நடந்தால், அந்த போட்டியாளர் ரெட் கார்டு கொடுத்து உடனடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவார்கள். குறிப்பாக 3வது சீசனில், போட்டியாளராக கலந்துகொண்ட சரவணன், தான் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் செல்வேன் என கூறிய காரணத்தால், அவரை உடனடியாக வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள். அவரைத் தொடர்ந்து 7-வது சீசனில் கலந்துகொண்ட பெண்கள் சிலர் பிரதீப் ஆண்டனி மீது புகார் கூறியதை அடுத்து, அவரும் ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

44
சிக்கலில் கம்ருதீன்

தற்போது அதேபோன்ற ஒரு சிக்கலில் தான் கம்ருதீனும் சிக்கி உள்ளார். பெண்களிடம் அவர் அத்துமீறி நடந்து கொள்வதாக பார்வதி கூறி இருப்பதால், இந்த வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி இந்த விவகாரத்தை விவாதிக்கக் கூடும். அப்போது வேறு சில பெண்களும் அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தால், கண்டிப்பாக கம்ருதீனுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த விவகாரம் சோசியல் மீடியாவிலும் பேசுபொருள் ஆகி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories