Bigg Boss Tamil 10 : மாற்றம் தேடி பிக் பாஸ் வந்த மதுரைப் பொண்ணு... யார் இந்த முத்தழகி?

Published : Sep 06, 2026, 08:05 PM IST

Bigg Boss Contestant Muthazhagi : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார் முத்தழகி. அவர் யார்? அவருடைய பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
14
யார் இந்த முத்தழகி?

மாடலிங், நடிப்பு என ஒவ்வொரு துறையிலும் தன்னை நிரூபித்து வந்த முத்தழகி, தற்போது தனது கேரியரில் இதுவரை சந்திக்காத ஒரு புதிய களத்தில் கால் பதிக்கிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ன் போட்டியாளராக முத்தழகி களமிறங்கி உள்ளார். ஒரு மாடல் அழகியாக ஆரம்பித்த அவரது பயணம், வெறும் கிளாமர் உலகத்துக்குள் நின்றுவிடவில்லை. மிஸ் பெங்களூரு 2021 பட்டத்தை வென்று கவனம் பெற்ற முத்தழகி, அதன்பிறகு மாடலிங் துறையில் தனது திறமையை காட்டத் தொடங்கினார். தொடர்ந்து அலெக்ஸ் ஃபேஷன் சீசன் 4 வெற்றியாளராகவும் மாறி, ஃபேஷன் உலகில் தனது பெயரை அழுத்தமாக பதிவு செய்தார்.

Bigg Boss Tamil 10: யார் இந்த ஷாத்திகா? சினிமா முதல் சின்னத்திரை வரை கலக்கிய நடிகையின் முழு கதை

24
சீரியல் ஹீரோயினாக பார்த்தவர்... இப்போது பிக் பாஸ் ஹவுஸ்மேட்!

ஜீ தமிழின் ‘அமுதவும் அண்ணலட்சுமியும்’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பரிச்சயமானார் முத்தழகி. நடிப்புடன் டிஜிட்டல் உலகிலும் கவனம் செலுத்திய அவர், பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதுவரை கிடைத்த அடையாளங்கள் எல்லாவற்றையும் தாண்டி, இப்போது முத்தழகிக்கு கிடைக்கப் போகும் அடையாளம் வேறலெவலில் இருக்கும். அது அவரின் கேம் பிளானை பொறுத்து அமையும்.

Bigg Boss Tamil 10 : பிக் பாஸை அதிரவிடப்போகும் மேக்கப் ஆர்டிஸ்ட்... யார் இந்த அஸ்மிதா?

34
“பிக் பாஸ் போட்டியாளர்!”

பிக் பாஸ் தான் அவரது அடுத்த பெரிய டர்னிங் பாயிண்ட்டாக இருக்கப் போகிறது. மாடலிங் மற்றும் அழகிப் போட்டிகளில் கேமரா முன் நின்ற அனுபவம் முத்தழகிக்கு ஏராளம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் கேமராவை மட்டும் எதிர்கொள்வது போதாது. அங்கு மனிதர்களையும், சூழ்நிலைகளையும், போட்டியையும் சமாளிக்க வேண்டும். ஒரு நாள் நட்பு... அடுத்த நாள் கருத்து மோதல்... அதற்குப் பிறகு டாஸ்க்... என ஒவ்வொரு நாளும் ஆட்டம் வேறு லெவலுக்கு செல்லும். அந்த சூழலில் முத்தழகியின் ஆட்டம் என்னவாக இருக்கும் என்பதுதான் இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Bigg Boss Tamil 10 : சினிமா கனவோடு பிக் பாஸ் வந்துள்ள சீரியல் ஹீரோ... யார் இந்த வினோத் பாபு?

44
அழகிப் பட்டம் வென்றவர் பிக் பாஸ் டைட்டில் வெல்வாரா?

முத்தழகியின் பிளஸ் பாயிண்ட் அவரது தன்னம்பிக்கையும் கேமரா அனுபவமும். ஆனால் பிக் பாஸ் வீடு அவரது பொறுமைக்கும் மனநிலைக்கும் மிகப்பெரிய சோதனையாக இருக்கலாம். இதுவரை ரசிகர்கள் பார்த்தது மாடல் முத்தழகி... நடிகை முத்தழகி... இனி பார்க்கப் போவது... ஒரிஜினல் முத்தழகி! அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர், சின்னத்திரையில் ரசிகர்களை பெற்றவர், இப்போது பிக் பாஸ் வீட்டில் தனது கேமை ஆரம்பிக்கிறார். “மிஸ் பெங்களூரு”வாக தொடங்கிய கதை... “பிக் பாஸ்” வீட்டில் எந்த இடத்தில் முடியும்? என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.

Bigg Boss 2026 : பிக்பாஸ் வரலாற்றிலேயே இப்படி ஒன்று நடந்தது இல்லையாம்!

Read more Photos on
click me!

Recommended Stories