Bigg Boss Tamil 10 : பிக் பாஸை அதிரவிடப்போகும் மேக்கப் ஆர்டிஸ்ட்... யார் இந்த அஸ்மிதா?

Published : Sep 06, 2026, 07:26 PM IST

Bigg Boss Contestant Asmitha : இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரும், புகழ்பெற்ற மேக்கப் ஆர்டிஸ்டுமான அஸ்மிதா பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

PREV
14
யார் இந்த அஸ்மிதா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றன. அந்த வகையில், இந்த முறை முற்றிலும் வித்தியாசமான பின்னணியில் இருந்து ஒரு போட்டியாளர் களமிறங்கி உள்ளார். அவர் தான் அஸ்மிதா. ஃபேஷன் உலகில் பிரபலமான முகமாக வலம் வரும் அஸ்மிதா, ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இன்ஃப்ளூயன்சரும் ஆவார். தனது மேக்கப் திறமை, ஸ்டைலிங் மற்றும் அழகு சார்ந்த பதிவுகள் மூலம் இணையத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

Bigg Boss Tamil 10 : சினிமா கனவோடு பிக் பாஸ் வந்துள்ள சீரியல் ஹீரோ... யார் இந்த வினோத் பாபு?

24
அஸ்மிதா மீது எகிறும் எதிர்பார்ப்பு

ஆனால், இதுவரை ரசிகர்கள் பார்த்த அஸ்மிதாவை விட, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப் போகும் அஸ்மிதா எப்படி இருப்பார்? என்பதுதான் இப்போது ஹாட் டாபிக். சமூக வலைதளங்களில் கேமராவை தைரியமாக எதிர்கொண்டாலும், பிக் பாஸ் வீடு என்பது முற்றிலும் வேறொரு களம். 24 மணி நேரமும் கேமரா கண்காணிப்பு, தினமும் புதிய டாஸ்குகள், போட்டி, கருத்து மோதல்கள், நட்பு, பிரிவு என ஆட்டம் சூடுபிடித்துக் கொண்டே இருக்கும். இந்த சூழலில் அஸ்மிதாவின் உண்மையான குணம் எப்படி வெளிப்படும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Kumaran in Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர்.. ரசிகர்களுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ்!

34
அஸ்மிதாவிற்கு ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கு

மற்ற போட்டியாளர்களுடன் அவர் எளிதாக நட்பு கொள்வாரா? டாஸ்க் என்று வந்துவிட்டால் அதிரடி காட்டுவாரா? கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அமைதியாக கடந்து செல்வாரா அல்லது தனது நிலைப்பாட்டை ஓப்பனாக பேசுவாரா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த அனுபவம் அஸ்மிதாவுக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு பிளஸ் பாயிண்ட்டாக அமையலாம். அதே நேரத்தில், அங்கு ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயல்பாடும் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்பதால், இந்தப் பயணம் அவருக்கு மிகப்பெரிய சவாலாகவும் இருக்கலாம்.

Black Pandi in Bigg Boss: சிரிக்க வைத்த பாண்டி..இனி போட்டியாளராக மிரட்டுவாரா? பிக்பாஸ் 10-ல் பிளாக் பாண்டி!

44
அஸ்மிதா ஃபேமிலி

அழகு மற்றும் ஃபேஷன் உலகில் தனது திறமையால் கவனம் ஈர்த்த அஸ்மிதா, இப்போது தனது ஆளுமையால் பிக் பாஸ் ரசிகர்களை கவரப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அஸ்மிதாவுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு தான் அவருக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் அஸ்மிதா. ஒரு சிங்கிள் மதராக தான் சந்திக்கும் சவால்கள் குறித்தும் அஸ்மிதா பிக் பாஸ் வீட்டில் பேச வாய்ப்புள்ளது.

Bigg Boss Tamil Season 10 House : சீசன் 10-க்காக டோட்டலாக மாறிய பிக் பாஸ் வீடு? அதில் இம்புட்டு வசதிகளா?

Read more Photos on
click me!

Recommended Stories