டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?

Published : Dec 05, 2025, 03:46 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் நடைபெறாத நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அது யார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Double Eviction in Bigg Boss Tamil

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 20 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், 30 நாட்களுக்கு பின்னர் நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். தற்போது 14 போட்டியாளர்களுடன் சென்றுகொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஆதிரை வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதனால் ஆட்டம் மேலும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக எஃப்.ஜே, வியானா இடையேயான காதலுக்கு முட்டுக்கட்டை போடவே ஆதிரையை உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்.

24
பிக் பாஸ் டாஸ்க்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில், இந்த வாரம் கிளாசிக் சினிமா, மாடர்ன் சினிமா என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்கள் இருவருக்கும் ஒரு நெக்லஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நெக்லஸை திருடுபோகாமல் பாதுகாப்பது தான் டாஸ்க். இதில் கிளாசிக் சினிமா அணியினர் ஏற்கனவே மாடர்ன் சினிமா அணியிடம் இருந்த நெக்லஸை திருடிவிட்டார்கள். பிரஜன் தான் அந்த நெக்லஸை திருடி ஒளித்துவைத்திருக்கிறார். அதேபோல் தங்கள் வசம் இருக்கும் நெக்லஸை திருடுபோகாமலும் கிளாசிக் சினிமா அணியினர் பாதுகாத்து வருகின்றனர்.

34
பிக் பாஸ் நாமினேஷன்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து 11 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். ரம்யா வீட்டு தலை ஆனதால் அவர் நாமினேட் ஆகவில்லை. அதேபோல் அரோரா, ஆதிரை, வியானா ஆகியோரும் நாமினேஷனில் இருந்து தப்பினர். எஞ்சியுள்ள 11 பேரும் இந்த வாரம் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இதில் வினோத் அதிகப்படியான வாக்குகளை பெற்று லீடிங்கில் உள்ளதால், அவர் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பு இல்லை. அதேபோல் பார்வதி, திவ்யா, விக்ரம், கம்ருதீன் ஆகியோருக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்திருப்பதால் அவர்களும் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.

44
டபுள் எவிக்‌ஷன்

எஞ்சியுள்ள 6 பேரில் எஃப்.ஜே, பிரஜன், சாண்ட்ரா ஆகிய மூவரும் சற்று கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளதால் இவர்களும் காப்பாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. மீதமுள்ளது சுபிக்‌ஷா, கனி மற்றும் அமித் பார்கவ் தான். இவர்களில் சுபிக்‌ஷா தான் கம்மியான வாக்குகள் பெற்றிருக்கிறார். அதனால் அவர் எலிமினேட் ஆவது கிட்டத்தட்ட உறுதி. டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றால் மற்றொரு நபராக கனி அல்லது அமித் எலிமினேட் ஆவார்கள் என கூறப்படுகிறது. இதனால் இந்த வாரம் செம ட்விஸ்ட் காத்திருக்கிறது. பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட சுபிக்‌ஷா இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ளது பலருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories