இரவில் பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்... காரணம் என்ன?

Published : Nov 25, 2025, 04:00 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ், பிக் பாஸ் வீட்டுக்கு சென்று அங்குள்ள போட்டியாளர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்திருக்கிறார். அவர் எதற்காக சென்றார் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
14
Keerthy Suresh Enter Bigg Boss House

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 15 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்த சீசன் தொடங்கி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும் இதில் யார் வெற்றி பெறுவார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

24
பிக் பாஸில் ப்ரொமோஷன் செய்யும் பிரபலங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளதால் இந்நிகழ்ச்சி மூலம் ப்ரோமோஷன் செய்தால் அது பட்டி தொட்டி எங்கும் சென்று சேரும் என்பதால் ஏராளமான படங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரமே பூர்ணிமா நடித்த யெல்லோ, கவினின் மாஸ்க் மற்றும் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்த நடு சென்டர் வெப் சீரிஸ் ஆகியவற்றிற்கு ப்ரொமோஷன் செய்தனர்.

34
பிக் பாஸ் வீட்டில் கீர்த்தி சுரேஷ்

இதற்காக பூர்ணிமா, கவின், சூர்யா சேதுபதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று அங்குள்ள போட்டியாளர்கள் முன்னிலையில் தங்கள் படங்களின் ட்ரெய்லரை போட்டுக்காட்டி அதை ப்ரோமோஷன் செய்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்திற்கு ப்ரமோஷன் செய்ய பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார். இரவில் திடீரென சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷுக்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

44
கீர்த்தி சுரேஷ் வந்தது ஏன்?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்று வருவதால் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி சீருடைகள் இருந்தனர். அவர்களிடம் கலந்துரையாடிய கீர்த்தி சுரேஷ் உங்கள் அனைவருக்கும் வெளியே நிறைய ரசிகர்கள் இருப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி தான் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படம் நவம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால் அதற்கு ஆதரவளிக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கார்டன் ஏரியாவில் போட்டியாளர்கள் அனைவருடனும் சேர்ந்து டான்ஸ் ஆடிவிட்டு வெளியே சென்றார் கீர்த்தி சுரேஷ்.

Read more Photos on
click me!

Recommended Stories