வைரலான கல்யாண போட்டோ... அப்போ முரட்டு சிங்கிள்னு சொன்னதெல்லாம் பொய்யா? உண்மையை உடைத்த திவாகர்

Published : Nov 25, 2025, 12:08 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன வாட்டர்மிலன் ஸ்டார் திவாகரின் கல்யாணா போட்டோ வைரலான நிலையில், அதுபற்றி அவரே முதன்முறையாக விளக்கம் அளித்து இருக்கிறார்.

PREV
14
Diwakar Clarifies Marriage Issue

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் அறிமுக இயக்குனர் ராஜபாண்டி நடித்து இயக்கிய திவ்யா திரைப்படம் முன்னோட்ட காட்சி நிகழ்வு இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பிக் பாஸ் புகழ் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் கலந்து கொண்டு திவ்யா திரைப்படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாம் புது முகமாக இருந்தார்கள் முதலில் நடிப்பதற்கு ஒரு சிலர் கஷ்டப்படுவார்கள் அதெல்லாம் இல்லாமல் இயற்கையாக நடித்தார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும்போது சசிகுமார் அண்ணன் எடுத்த நந்தன் படம் போன்ற உணர்வு எனக்கு இருந்தது என கூறினார்.

24
பிக்பாஸ் ஸ்கிரிப்டடு நிகழ்ச்சியா?

இயக்குனர் சசிகுமார் அண்ணனை போல் இவர்கள் பல சமுதாய சீர்திருத்த படங்களை எடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். திவ்யா திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன் இந்த படம் எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்ப்பதை போல நானும் எதிர்பார்க்கிறேன், இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார். பிக் பாஸை ஸ்கிரிப்ட் என அனைவரும் நினைக்கிறார்கள் ஆனால் பிக் பாஸில் எந்த வித ஸ்கிரிப்டும் கிடையாது. அனைவரும் என்னை மெலிந்து விட்டீர்கள் என்று கூறுகின்றனர். நாங்கள் பிக் பாஸில் உள்ளே சென்றவுடன் எங்களை அடைத்து விடுவார்கள் அங்கு நடந்த அனைத்துமே உண்மை. நிறைய ரிவியூவர்கள் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்.

34
திவாகரின் பிக் பாஸ் அனுபவம்

பிக் பாஸ் வீட்டிற்குள் சாப்பாட்டிற்கு தட்டுப்பாடு இருக்கு. அவர்கள் சொல்லும் டாஸ்கை நாங்கள் செய்து கொண்டே இருப்போம். ஒரு ஸ்கூலில் படித்தால் கூட பிரீயாக இருப்போம் நான் பிக் பாஸ் வீட்டில் வீட்டு வேலை கத்துக் கொண்டேன். சுடுதண்ணி கூட வைக்க தெரியாத என்னை பாத்திரம் கழுவுவதில் இருந்து டாய்லெட் கழுவுவது வரை அனைத்தும் கத்துக்கொண்டோம். வெவ்வேறு குணமுடைய 20 பேர் ஒரு இடத்திலிருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். நான் பிக் பாஸில் இருந்து வெளியேறியவுடன் குழந்தைகள் நிறைய பேர் அழுக ஆரம்பித்து விட்டார்கள். நடிப்பு அரக்கன் என்ற சொல் பச்சைக் குழந்தை முதல் பெரியால் வரை வைரலாகியது, பிக் பாஸில் டைட்டில் வின்னர் யார் வருவார் என இப்போதைக்கு சொல்ல முடியாது, பிக் பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரி உள்ளே நுழைந்தால் இன்னும் கேம் மாறலாம். மதுரை மீனாட்சி தாயின் அருளால் பிக் பாஸிற்கு சென்றேன் என்றார்.

44
திவாகர் விளக்கம்

திவாகருக்கு திருமணமாகிவிட்டதாக பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்து அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது : “என்னுடைய பர்சனல் லைஃப் பற்றி நிறைய தவறான தகவல்கள் சில யூடியூபர்களால் பரப்பப்படுகிறது. நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். 3 பெண்களையெல்லாம் திருமணம் செய்யவில்லை. இதன்பின்னர் என்னைப்பற்றி பொய்யான தகவல் வந்தால், அதை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன். நான் பிக்பாஸ் போன பின்னர் எனக்கு நிறைய ரசிகர்கள் வந்துவிட்டார்கள், அதனால் எனக்கு கெட்ட பெயர் வர வைக்கும் விதமாக சிலர் இப்படி செய்து வருவதாக திவாகர் குற்றம் சாட்டி உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories