எலிமினேட் ஆன போட்டியாளரை மீண்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக களமிறக்கும் பிக்பாஸ்... டி.ஆர்.பி எகிறப்போகுது..!

First Published | Dec 29, 2022, 9:39 AM IST

தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் இதற்கு முன்  3-வது சீசனில் வனிதா இதேபோல் எலிமினேட் ஆனபின் வைல்டு கார்டு எண்ட்ரியாக ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பிக்பாஸில் இதுவரை இல்லாத வகையில், இந்த முறை பொதுமக்கள் என்கிற அடையாளத்துடன் இரண்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தி அதில் இருந்து ஷிவின் மற்றும் தனலட்சுமி ஆகியோர் தேர்வாகி பிக்பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.

இவர்கள் இருவருமே வேறலெவலில் கேம் ஆடினர். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் விறுவிறுப்பாக போனதற்கு முக்கிய காரணமே தனலட்சுமி தான் என்றே சொல்லலாம். இவருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தும் கடந்த வாரம் இவர் எலிமினேட் செய்யப்பட்டார். அவரின் எலிமினேஷன் ஏற்றுக்கொள்ள முடியாதது என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதையும் படியுங்கள்... திரிஷா - சன்னி லியோன் படங்கள் மோதல்! இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ

Tap to resize

கதிரவன், மைனா, ரச்சிதா ஆகியோர் எதுவும் செய்யாமல் ஜாலியாக இருந்து வரும் நிலையில், நன்றாக விளையாடி வந்த தனலட்சுமியை எலிமினேட் செய்தது நியாயமற்ற செயல் என கண்டித்து ட்ரோல் செய்து வந்தனர். இவ்வாறு மக்களிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக தனலட்சுமியை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்த சீசனில் இதுவரை வைல்டு கார்டு எண்ட்ரியாக யாரும் உள்ளே செல்லாததால், தனலட்சுமி தான் முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தான் அவர் வெளியே வந்த பிறகும் எந்த ஊடகங்களுக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் பிக்பாஸ் 3-வது சீசனில் வனிதா இதேபோல் எலிமினேட் ஆனபின் வைல்டு கார்டு எண்ட்ரியாக ரீ-எண்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த டார்கெட் சிவகார்த்திகேயன்... அவர் கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன தில் ராஜு..!

Latest Videos

click me!