கேப்டன் ஆகியும் நாமினேட் ஆன அமுதவாணன்! இந்தவார நாமினேஷனில் இருந்து தப்பிய ஒரே ஒரு அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

First Published | Dec 27, 2022, 8:25 AM IST

பிக்பாஸ் வீட்டில் இந்தவாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் ரெட் கார்டு உள்ள போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 21 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். பைனல் வைர செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தனலட்சுமி கடந்த வாரம் எலிமினேட் ஆனது பிக்பாஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நேற்று நடைபெற்றது. இதில் அசீம் மற்றும் அமுதவாணன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த டாஸ்க்கில் அமுதவாணன் வெற்றிபெற்று இந்த சீசனில் முதன்முறையாக கேப்டன் ஆனார். வழக்கமாக கேப்டன் ஆனால் அந்த போட்டியாளரை அந்தவார எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது.

இதையும் படியுங்கள்... நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லனு சொன்னீங்க... அப்போ இது என்ன? - துணிவு படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Tap to resize

ஆனால் நேற்று நடந்த எவிக்‌ஷனில் கேப்டனையும் நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் சொன்னதால் ஷாக் ஆனார் அமுதவாணன். இதையடுத்து நடந்த ஓபன் நாமினேஷனில் ரெட் கார்டு உள்ள போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ரெட் கார்டு இல்லாத போட்டியாளர் நாமினேட் ஆக மாட்டார் என்றும் கூறி இருந்தார் பிக்பாஸ். 

இந்த நாமினேஷன் முடிவில் ரச்சிதாவை தவிர எஞ்சியுள்ள 8 போட்டியாளர்களிடமும் ரெட் கார்டு இருந்ததால் அவர்கள் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். ரச்சிதாவிடம் ரெட் கார்டு எதுவும் இல்லாததால் அவர் அதிர்ஷ்டவசமாக நாமினேஷனில் இருந்து தப்பினார். இதனால் ரச்சிதாவை அனைவரும் அதிர்ஷ்டசாலி போட்டியாளர் என கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... காலில் விழாத குறையாக கெஞ்சியும் கேட்காத சரண்யா பொன்வண்ணன்! கேவலமாக நினைக்கிறார்.. தயாரிப்பாளர் வி.ராஜா ஆவேசம்!

Latest Videos

click me!