பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்றதற்கு காரணம் ஜிபி முத்து. அவரால் முதல் இரண்டு வாரம் கலகலப்பாக சென்ற நிலையில், திடீரென தனது மகனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் பாதியிலேயே வெளியேறியதால் சற்று டல் அடிக்க தொடங்கியது.
பின்னர் இந்நிகழ்ச்சியை விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டது இரண்டே பேர் தான். ஒன்று அசீம் மற்றொன்று தனலட்சுமி. இதில் அசீம் சீரியலில் நடித்து பாப்புலர் ஆனவராக இருந்தாலும், தனலட்சுமி பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றவர். அவர் விளையாடிய விதம், யாராக இருந்தாலும் துணிந்து நின்று கேள்வி கேட்பது ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
குறிப்பாக இந்த சீசனில் முதன்முதலில் குறும்படம் போடப்பட்டது தனலட்சுமிக்காக தான். பொம்மை டாஸ்க்கில் அசீம் அவர்மீது வைத்த குற்றச்சாட்டை குறும்படம் போட்டு அது பொய் என நிரூபித்தார் கமல்ஹாசன். இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக இருந்து வந்த தனலட்சுமி நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார்.
இதையும் படியுங்கள்... ரியல் ஹீரோ என நிரூபித்த சூர்யா... ரசிகர்களின் மேற்படிப்பு மற்றும் வேலை கிடைக்க உதவுவதாக வாக்குறுதி
அவரது எவிக்ஷன் நியாயமற்றது என அவரது ரசிகர்கள் குரல்கொடுத்து வருகின்றனர். எதுவுமே செய்யாமல் இருக்கும் மைனா, ரச்சிதா போன்றவர்களெல்லாம் வீட்டுக்குள் இருக்கும்போது நன்றாக விளையாடிய தனலட்சுமியை எலிமினேட் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என பிக்பாஸ் ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.