ஆவலோடு காத்திருந்த அமுதவாணன்.. அலேக்காக பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறிய கதிரவன்- பிக்பாஸில் செம டுவிஸ்ட்

First Published | Jan 18, 2023, 8:13 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல போட்டியாளர் ஒருவர் குறைந்த அளவிலான பணத்துடன் கூடிய மூட்டைய எடுத்துக் கொண்டு வெளியேறிய அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இறுதி வாரத்தை எட்டி உள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது அசீம், விக்ரமன், மைனா, ஷிவின், கதிரவன், அமுதவாணன் ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதில் யார் பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை ஜெயிக்க போகிறார் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு கடைசி சில வாரங்களுக்கு முன் பணப்பெட்டி ஒன்று வீட்டுக்குள் அனுப்பப்படும். ஆனால் இந்த சீசனில் இறுதி வாரத்தில் தான் அந்த பணப்பெட்டி அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கமாக பணப்பெட்டியை அனுப்பும் பிக்பாஸ், இந்த முறை வித்தியாசமாக பணமூட்டையை அனுப்பி வைத்துள்ளார்.

Tap to resize

இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களில் முதல் இரண்டு சீசன்களில் யாருமே இந்த பணப்பெட்டியை எடுக்கவில்லை. இதையடுத்து நடந்த மூன்றாவது சீசனில் கவின் ரூ.5 லட்சம் தொகையுடன் வெளியேறினார். நான்காவது சீசனில் கேப்ரியல்லா ரூ.5 லட்சத்துடன் வெளியேறினார். 5 சீசனில் சிபி சந்திரன் ரூ.12 லட்சம் அடங்கிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வெளியேறினார்.

இதையும் படியுங்கள்... இளையராஜா இசையில் உருவாகியுள்ள "நினைவெல்லாம் நீயடா" படத்தின் மோஷன் போஸ்டரை கௌதம் மேனன் வெளியிட்டார்!

இந்த முறை அந்த பணப்பெட்டியை எடுக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் 100 நாளில் பண மூட்டையை வீட்டுக்குள் அனுப்பிய பிக்பாஸ் அதில் ரூ.3 லட்சம் தொகை இருப்பதாக கூறி இருந்தார். கடந்த சீசனைப் போல் இந்த சீசனிலும் பணத்தின் அளவு அதிகரித்த பின்னர் தான் அதை எடுக்க போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீர் டுவிஸ்டாக ரூ.3 லட்சம் தொகையுடன் அந்த பணமூட்டையை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் கதிரவன். இது அனைவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக அதிக தொகை வந்தால் எடுக்கலாம் என ஆவலோடு காத்திருந்த மைனா மற்றும் அமுதவாணனுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

கதிரவன் பணப்பெட்டியை எடுக்க தகுதியான நபர் என்றாலும், அவர் இன்னும் கொஞ்சம் தொகை கூடிய பின் எடுத்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் குறைவான தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறிய நபர் என்றால் அது கதிரவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 'நீ உன் நண்பனுடன் சொர்க்கத்தில் இணைந்து விட்டாய்'.. சுஷாத் சிங் வளர்ப்பு நாய் இறப்பு! தங்கை உருக்கம்!

Latest Videos

click me!