‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியின் கடைசி எலிமினேஷன்... இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா?

Published : Jan 13, 2023, 10:18 AM IST

பிக்பாஸ் போட்டியாளர்களான அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, ஏடிகே ஆகிய 6 பேரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர்.

PREV
14
‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியின் கடைசி எலிமினேஷன்... இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவரா?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 2017-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

24

இந்த 7 போட்டியாளர்களின் அமுதவாணன் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றதன் காரணமாக முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் எஞ்சியுள்ள அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, ஏடிகே ஆகிய 6 பேரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்று இருந்தனர்.

இதையும் படியுங்கள்... நடுரோட்டில் தகராறு... அடிதடியில் இறங்கிய பிரபல தொகுப்பாளர் மீது வழக்குப்பதிவு

34

இதில் அசீம் மற்றும் விக்ரமன் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர்கள் இந்த வாரம் வெளியேற வாய்ப்பில்லை. இதற்கு அடுத்த இடங்களை ஷிவின் மற்றும் கதிரவன் பிடித்துள்ளனர். எஞ்சியுள்ள மைனா மற்றும் ஏடிகே தான் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளனர். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளது.

44

அதிலும் குறிப்பாக ஏடிகே தான் கடைசி இடத்தில் உள்ளார். அவர் தான் இந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக எலிமினேட் ஆகும் நபராக இருக்க வாய்ப்புள்ளது. எஞ்சியுள்ள அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவாணன் ஆகியோர் இறுதி வாரத்திற்குள் செல்ல உள்ளனர். இவர்கள் 6 பேரில் இருந்து ஒருவர் தான் இந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இரண்டாம் நாள் வசூலில் தொய்வை சந்தித்த துணிவு... அஜித் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories