பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது அசீம், விக்ரமன், ரச்சிதா, மைனா, கதிரவன், அமுதவாணன், ஷிவின், ஏடிகே, மணிகண்டன் ஆகிய 9 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் ரச்சிதா தவிர எஞ்சியுள்ள 8 போட்டியாளர்களுமே இடம்பெற்று உள்ளனர். இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டதால், எந்தவித சண்டை சச்சரவுகள் இன்றி சென்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருந்தனர். நேற்றுடன் இந்த டாஸ்க் நிறைவு பெற்றது.
எஞ்சியுள்ள கதிரவன், மைனா, ஏடிகே, மணிகண்டன் மற்றும் அமுதவாணன் ஆகிய 5 பேருக்கும் இடையே குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசங்களே உள்ளன. இவர்கள் 5 பேரில் இருந்து ஒருவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக ஏடிகே இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.