பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. பைனலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சி உள்ள நிலையில், இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான டாஸ்க்குகள் நடத்தப்படும், அதில் இறுதியாக யார் அதிக பாயிண்ட் எடுக்கிறார்களோ அந்த போட்டியாளர் தான் முதல் ஆளாக பைனலுக்கு தகுதி பெறுவார்.