கதிரவனை தொடர்ந்து... பணப்பெட்டியுடன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷிவின்...? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Published : Jan 19, 2023, 07:46 AM ISTUpdated : Jan 19, 2023, 07:52 AM IST

கதிரவன் பணமூட்டையுடன் வெளியேறிய நிலையில், அடுத்ததாக ஷிவின் கணேசன் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

PREV
15
கதிரவனை தொடர்ந்து... பணப்பெட்டியுடன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷிவின்...? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா, ஷிவின், கதிரவன் ஆகிய 6 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் அனுப்பிய பணமூட்டையை எடுத்துக்கொண்டு கதிரவன் வெளியேறியதால், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

25

இதுவரை நடந்த முடிந்த சீசன்களில் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் தொகையுடன் தான் போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். ஆனால் கதிரவன் ரூ.3 லட்சத்துடன் வெளியேறியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பொதுவாக பணப்பெட்டி அனுப்பப்படும் போது பணத்தின் மதிப்பை பிக்பாஸ் அதிகரிக்க அதிகரிக்க தான் சுவாரஸ்யம் அதிகரிக்கும்.

35

ஆனால் கதிரவன், பிக்பாஸுக்கு நேரமே கொடுக்காமல் உடனடியாக பணமூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறியதால், பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரே சீசனில் இரண்டாவது முறையாக பணப்பெட்டியை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளார் பிக்பாஸ். ரூ.3 லட்சம் தொகையுடன் அந்த பணப்பெட்டி வந்துள்ளது. ஒரு நிமிடத்துக்கு ரூ.2500 வீதம் அதன் மதிப்பு கூடிக்கொண்டே இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... இன்னும் வெளியாகாத நயன் திருமண வீடியோ... முந்திக்கொண்டு ஹன்சிகா! விரைவில் வெளியாகும் வெட்டிங் வீடியோ!

45

இந்த பணப்பெட்டியை விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் தாங்கள் எடுக்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். எஞ்சியுள்ள 3 பேரில் அமுதவாணனும், மைனாவும் ரூ.20 லட்சத்துக்கு மேல் சென்றால் அந்த பணப்பெட்டியை எடுக்க முயற்சிப்போம் என தெரிவித்தனர். அதேபோல் ஷிவின் 10 லட்சத்துக்கு மேலே சென்றால் யோசிப்பேன் என சொல்லியிருந்தார்.

55

தற்போது கிடைத்துள்ள தகவல்படி, அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு ஷிவின் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பணப்பெட்டியில் ரூ.10 லட்சத்துக்கு மேல் தொகை இருந்ததாகவும், அதனை எடுத்துக்கொண்டு அவர் வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக வாய்ப்பு இருக்கிறது. பைனலில் வெற்றிபெற தகுதி கொண்ட போட்டியாளராக பார்க்கப்பட்ட ஷிவின் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்... விக்ரமனுக்கு ஓட்டு கேட்டு களமிறங்கிய திருமாவளவன்... அப்போ பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானா?

Read more Photos on
click me!

Recommended Stories