விக்ரமனுக்கு ஓட்டு கேட்டு களமிறங்கிய திருமாவளவன்... அப்போ பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானா?

Published : Jan 18, 2023, 03:29 PM IST

விக்ரமனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

PREV
14
விக்ரமனுக்கு ஓட்டு கேட்டு களமிறங்கிய திருமாவளவன்... அப்போ பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இறுதி வாரத்தை நெருங்கி உள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்ட பைனல் நடக்க இருக்கிறது. தற்போது அசீம், அமுதவாணன், விக்ரமன், மைனா, ஷிவின் ஆகிய 5 பேர் பைனலுக்கு முன்னேறி உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று 50 லட்சம் பரிசுத் தொகையையும், பிக்பாஸ் டிராபியையும் வெல்ல உள்ளார்.

24

குறிப்பாக அசீம் மற்றும் விக்ரமன் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அசீமுக்கு தான் இதுவரை அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் அவர் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீர் டுவிஸ்ட் ஆக விக்ரமனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் களமிறங்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஓஹோ... இதுதான் விஷயமா..! வைல்டு கார்டு போட்டியாளரே இல்லாமல் முடிவுக்கு வரும் பிக்பாஸ் 6 - காரணம் என்ன?

34

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “தம்பி விக்ரமன் அவர்களை வெற்றிபெறச் செய்வோம். பிக்பாஸ் தேர்வுக்கான போட்டியில் விக்ரமனுக்கு வாக்களிப்போம். அறம் வெல்லும்”  என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவால் விக்ரமனுக்கு அதிகப்படியான வாக்குகள் அவரது கட்சியினர் சார்பில் கிடைக்க வாய்ப்புள்ளது.

44

விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அதே வேளையில், அசீமின் தாய்மாமா ஆளூர் ஷானவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர் தற்போது எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஆவலோடு காத்திருந்த அமுதவாணன்.. அலேக்காக பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறிய கதிரவன்- பிக்பாஸில் செம டுவிஸ்ட்

Read more Photos on
click me!

Recommended Stories