ஓஹோ... இதுதான் விஷயமா..! வைல்டு கார்டு போட்டியாளரே இல்லாமல் முடிவுக்கு வரும் பிக்பாஸ் 6 - காரணம் என்ன?

First Published Jan 18, 2023, 2:37 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்துமுடிந்த 5 சீசன்களில் ஒருவராவது வைல்டு கார்டு போட்டியாளராக அனுப்பப்படுவர், ஆனால் 6-வது ஒரு போட்டியாளர் கூட வைல்டு கார்டு எண்ட்ரியாக கலந்துகொள்ளவில்லை.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் சீசன் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் தான் இந்த 6 சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் ரித்விதா மற்றும் முகென் ராவ் ஆகியோர் டைட்டிலை தட்டிச் சென்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் ஆரி முதலிடம் பிடித்தார். அதேபோல் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக்பாஸ் 5-வது சீசனில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் அசீம், மைனா, விக்ரமன், ஷிவின், கதிரவன், அமுதவாணன் ஆகிய 6 பேர் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், நேற்று நடந்த பணமூட்டை டாஸ்க்கில் ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு கதிரவன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனால் தற்போது 5 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதில் அசீம் அல்லது விக்ரமன் ஆகிய இருவரில் தான் டைட்டில் ஜெயிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் இருவரில் யார் அந்த பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை ஜெயிக்க போகிறார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும்.

இதையும் படியுங்கள்... என்னிடம் 31 குழந்தைகள் இருக்கு... அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - ஹன்சிகா நெகிழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்துமுடிந்த 5 சீசன்களில் ஒருவராவது வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி முதல் சீசனில் ஹரீஷ் கல்யாண், பிந்து மாதவி, சுஜா வருணி, காஜல் பசுபதி ஆகியோரும், இரண்டாவது சீசனில் விஜயலட்சுமி, மூன்றாவது சீசனில் கஸ்தூரி, நான்காவது சீசனில் சுசித்ரா, ஐந்தாவது சீசனில் அமீர், சஞ்சீவ் ஆகியோரும் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டனர்.

ஆனால் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் தற்போது 100 நாட்களைக் கடந்த விட்ட நிலையிலும் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் கூட அனுப்பப்படவில்லை. இதற்கு காரணம் இந்த சீசனில் ஆரம்பத்திலேயே அதிகளவிலான போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு விட்டனர்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 15 முதல் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்படும். ஆனால் இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே அதிக அளவிலான போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டதன் காரணமாகத் தான் இந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக யாரும் உள்ளே அனுப்பப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... வசூலில் டபுள் செஞ்சுரி அடித்த வாரிசு... அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதகளப்படுத்திய தில் ராஜு

click me!