டாடா மோட்டார்ஸ் புதிய ஃபேஸ்லிஃப்ட் பஞ்ச் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இது நவீன டிசைன் மற்றும் முதல் முறை டர்போ-பெட்ரோல் இன்ஜின் போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது.
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் புதிய ஃபேஸ்லிஃப்ட் பஞ்ச் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மினி எஸ்யூவி இப்போது முற்றிலும் புதிய லுக் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களுடன் வந்துள்ளது. 2021 அக்டோபரில் முதன்முறையாக அறிமுகமான பஞ்ச், தொடங்கிய நாளிலிருந்து டாடாவுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்த மாதலாகவே உள்ளது. இதுவரை மொத்தமாக 6.78 லட்சம் யூனிட்களுக்கு மேல் விற்பனையாகி இருப்பது இதன் பிரபலத்தைக் காட்டுகிறது. புதிய மாடலில் Punch EV போல நவீன உட்புற-வெளிப்புற டிசைன், கூடுதல் அம்சங்கள் மற்றும் முதல் முறையாக டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
24
டாடா பஞ்ச் விற்பனை
விற்பனை மைல்கல்லில் பார்க்கும்போது, பஞ்ச் டாடா நெக்ஸானை விட வேகமாக முன்னேறியுள்ளது. நெக்ஸானுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த பஞ்ச், 47 மாதங்களில் 6 லட்சம் விற்பனை என்ற சாதனையை எட்டியுள்ளது. அதே இலக்கை எட்ட நெக்ஸானுக்கு 74 மாதங்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. குறைந்த காலத்தில் அதிக விற்பனையை உருவாக்கியதன் மூலம் பஞ்ச் இந்திய சந்தையில் டாடாவின் முக்கிய “மாஸ் மாடல்” ஆக மாறியுள்ளது.
34
டாடா பஞ்ச் டர்போ பெட்ரோல்
இந்திய பயணிகள் வாகன சந்தையில் உள்ள இடைவெளியை சரியாக கணித்து, டாடா நிறுவனம் பஞ்ச் காரை போட்டி விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.49 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது பஞ்ச், 18 பெட்ரோல், 7 சிஎன்ஜி, 8 எலக்ட்ரிக் என மொத்தம் 33 வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்ததன் பின்னர் விலையில் ரூ.85,000 வரை குறைப்பு கிடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது தொடக்க விலை சுமார் ரூ.5.59 லட்சம் ஆக உள்ளது.
பஞ்ச் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதன் எஸ்யூவி போன்ற நடைமுறை பயன்பாடே. உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ், உயர்ந்த சீட்டிங் போசிஷன், ஏறி இறங்க எளிதான வடிவமைப்பு போன்ற அம்சங்கள் இந்த குடும்பங்களுக்கு பிடித்த தேர்வாக மாறியது. மேலும் Global NCAP கிராஷ் டெஸ்டில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்றது இதன் நம்பகத்தன்மையை அதிகரித்தது. 2024-25 நிதியாண்டில் மட்டும் 1.96 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி, 16% வளர்ச்சி பதிவானதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பஞ்ச், இந்தியாவின் டாப் எஸ்யூவி பட்டியலில் முன்னணிக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.