28% GST போச்சு… 18% வந்துடுச்சு.. Alto, WagonR விலையை கேட்டா குஷி ஆயிடுவீங்க

Published : Jan 15, 2026, 01:44 PM IST

2025-ல் சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டி 18% ஆக குறைக்கப்பட்டதால், ஹெட்ச்பேக் கார் பிரிவு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இதன் விளைவாக, மாருதி சுசுகி நிறுவனம் பெரும் லாபம் அடைந்துள்ளது.

PREV
13
ஹேட்ச்பேக் விற்பனை

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக விற்பனை சரிவை சந்தித்து வந்த ஹெட்ச்பேக் கார் பிரிவு, 2025 ஆம் ஆண்டு முடிவடையும் போது வளர்ச்சி பாதையில் திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் குடும்பங்களின் முதன்மை தேர்வாக இருந்த சிறிய கார்கள், எஸ்யூவி மற்றும் காம்பாக்ட் கார்களின் வருகையால் பின்தள்ளப்பட்டன. ஆனால் 2025 இறுதியில் ஏற்பட்ட ஒரு முக்கிய வரி மாற்றம், இந்த பிரிவுக்கு புதிய உயிரூட்டியது. குறிப்பாக பட்ஜெட் கட்டுப்பாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மீண்டும் சிறிய கார்களை நோக்கி கவனம் செலுத்தத் தொடங்கினர்.

23
சிறிய கார்

இதற்குக் காரணமாக, சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டி 28% முதல் 18% ஆக குறைக்கப்பட்ட முடிவு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் 2025 செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது. இதனால் மாருதி சுசுகி ஆல்டோ, வேகன்ஆர், டாடா டியாகோ, அல்ட்ரோஸ், டொயோட்டா கிளான்சா, ஹூண்டாய் i10, i20, ரெனால்ட் க்விட் உள்ளிட்ட பிரபல மாடல்களின் விலை குறைந்துள்ளது. சில வாரங்களிலேயே இதன் தாக்கம் விற்பனை தரவுகளில் வெளியிடப்பட்டது. காம்பாக்ட் கார் விற்பனை சுமார் 20% உயர்ந்தது, சிறிய கார் டெலிவரிகளும் தொழில்துறையில் 23% வரை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக 2025 அக்டோபர்-டிசம்பர் பயணிகள் வாகன விற்பனையில் ஹேட்ச்பேக்குகளின் பங்கு 24.4% ஆக உயர்ந்தது.

33
வேகன்ஆர்

இந்த வளர்ச்சியில் அதிக லாபம் பெற்றது மாருதி சுசுகி நிறுவனமாகும். ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, வேகன்ஆர் போன்ற எண்ட்ரி-லெவல் மாடல்கள் 2025 டிசம்பரில் மட்டும் 91.8% ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தேவை திடீரென அதிகரித்ததால் சில பகுதிகளில் காத்திருப்பு காலம் 6 வாரங்கள் வரை சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு மாருதியின் எண்ட்ரி-செக்மென்ட் விற்பனை 31% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், முதல் முறை கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த நிலையில், எஸ்யூவிகளின் வளர்ந்து வரும் பிரபலமும் ஹேட்ச்பேக் பிரிவின் நீண்டகால வளர்ச்சிக்கு ஒரு சவாலாகவே தொடர்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories