Ducati Multistrada V4 | 43 லட்சம் கொடுத்து வாங்கி என்ன பிரயோஜனம்! மைலேஜ் 15 கி.மீ தான் தருமாம்!

First Published | Sep 3, 2024, 11:33 PM IST

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா V4 (Ducati Multistrada V4) பைக் ஒரு பிரீமியம் அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள். நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற பைக். இதன் ஆரம்ப விலை 43 லட்சம் முதல் தொடங்குகிறது.
 

Ducati Multistrada V4 RS

அட்வென்சர் பைக் ரைடர்கள் விரும்பும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா V4 RS (Ducati Multistrada V4) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. மேலும் இதுவரையில் வெளியான பைக்குகளில் மிகவும் விலைஉயர்ந்த பைக் என்ற இடத்தை பிடித்துள்ளது. Ducati Multistrada V4 RS ஒரே ஒரு வேரியண்ட் மற்றும் ஓரே ஒரு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இது ஒரு அட்வென்ச்சர் பைக்.

என்ஜின்

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 ஆர்எஸ் (Ducati Multistrada V4 RS) 1,158CC V4 Granturismo PS6 வகை என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 180 Php பவரையும், 118 NM டார்க் திறனையும் உருவாக்குகிறது. முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன், ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது.

Ducati Multistrada V4 RS

பைக் எடை மற்றும் எரிபொருள்

Multistrada V4 RS பைக் 260 கிலோ எடையும், 22 லிட்டர் பெட்ரோல் எரிபொருள் கொள்ளள கொண்ட டேங் கொண்டது. பைக்கின் வலிமை மற்றும் எடை குறைக்க உதவும் வகையில் அலுமினிய மோனோகோகே பிலியம் கொண்டுள்ளது.

பைக்கின் வடிவமைப்பு

Multistrada V4 RS பைக், ஸ்போர்ட்டி மற்றும் ஆக்ரோஷமான அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மல்டிஸ்ட்ராடா V4 RSக்கான பெஸ்போக் பெயிண்ட் திட்டத்தால் மெருகேற்றப்பட்டுள்ளது. பைக் பிரியர்களுக்கும் பிடித்த வண்ணத்தில் ஜொலிக்கிறது. சிவப்பு மற்றும் கருப்பு கோடுகளுடன் கூடிய ஐஸ்பெர்க் ஒயிட் வண்ணம் அழகாக இருக்கிறது. ADV-இன் ரைடிங் பொசிஷனின் சௌகரியம் மற்றும் வசதியுடன் கூடிய சூப்பர் பைக்கின் செயல்திறனை விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Ducati Multistrada V4 RS

தானியங்கி வசதிகள்

அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ரைடிங் மோட்களுடன் கூடியது. அதாவது ABS, Cornering ABS, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், மற்றும் மடிகதிர் செயலுக்கான எலக்ட்ரானிக் உதவி. 6.5-இன்ச் TFT தொடுதிரை(Digital Display) கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் கவர்ச்சி அறிகுறிகளை வழங்குகிறது. குரூஸ் கண்ட்ரோல், ஹீட்டெட் கிரிப், மற்றும் வின்ட்ஸ்கிரீன் சீரமைப்பு ஆகியவை பயன்படுத்தி பயணத்தை வசதியாகவும், எளிமையாகவும் மாற்றுகின்றன.

மைலேஜ்

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 ஆர்எஸ் (Ducati Multistrada V4 RS) பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 14 முதல் 16 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும். இது பயணிக்கும் நிலை மற்றும் வண்டியின் இயக்கம் பொருத்து மாறுபடலாம்.

Ducati Multistrada V4 RS

விலை

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 ஆர்எஸ் (Ducati Multistrada V4 RS) பைக்கின் எக்ஸ் ஷோரும் விலை இந்தியாவில் நகரத்திற்கு நகரம் மாறுபடுகிறது. இந்த பைக் இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது.

சென்னையில் 43,84,151 ரூபாயில் இருந்து விற்பனையாகிறது. தலைநகர் டெல்லி, கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களிலும் அதே தொகையிலிருந்து 100 - 500 என சற்றே கூடுதலாக விற்பனை செய்யப்படுகிது.

ஹைதரபாத்தில் 44 லட்சத்திலிருந்தும், புனே, மும்பை, பெங்களூரூ ஆகிய நகரங்களில் அதிகபட்சமாக 47.5 லட்சம் முதல் விற்பனையாகிறது.

முரட்டு லுக்.. செம ஸ்ட்ரோங் என்ஜின்.. இந்தியாவில் அறிமுகமானது Jawa 42 FJ - விலை 2 லட்சத்துக்கும் கம்மி!
 

BMW M 1000 XR Vs Ducati Multistrada V4 RS

ஒப்பீடு

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 ஆர்எஸ் (Ducati Multistrada V4 RS) பைக்கிற்கு போட்டியாக பேசப்படும் ஒரே பைக் BMW M 1000 XR. இந்த பிஎம்டபுள்யூ பைக் 999cc, இன்லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜினுடன் வருகிறது. டுகாட்டியை விட ஒரு கிலோமீட்டர் மைலேஜ் குறைவாகவே தருகிறது.

ஆனால், விலை மட்டும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 ஆர்எஸ்-ஐ விட அதிகம். BMW M 1000 XR பைக் இந்தியாவில் 51.30 லட்ச ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 ஆர்எஸ் இரு நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 29 அன்றுதான் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

137 கிமீ மைலேஜ் தருது.. 8000 ரூபாய் விலை வேற குறைவு.. பஜாஜ் சேடக் புதிய வேரியண்ட் வந்தாச்சு!

வாகனங்களுக்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட் வாங்குவது எப்படி? முழு விவரம் இதோ...
 

Latest Videos

click me!