மேலே குறிப்பிடப்பட்ட எடையானது, வழக்கமான Jawa 42ஐ விட சரியாக 2kg அதிகம். மேலும் 42 FJ ஆனது Jawa 42ஐ விட 2hp மற்றும் 3Nm அதிகமாக திறனை உற்பத்தி செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 42 FJயின் ஸ்டைலிங் அடிப்படையில், அது Yezdi Roadsterஐ போன்ற ஓவர்ஆல் லுக்கை கொண்டுள்ளது என்றே கூறலாம். டேங்க் கிளாடிங்கில் உள்ள அலுமினியம் பூச்சு மற்றும் புதிய LED ஹெட்லேம்ப் ஆகியவையும் Yezdi Roadster போலவே உள்ளது.