Published : Sep 03, 2024, 09:05 AM ISTUpdated : Sep 03, 2024, 09:06 AM IST
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டான ப்ளூ 3202-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் முந்தைய வகைகளை விட மலிவானது மற்றும் அதிக வரம்பை வழங்குகிறது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 137 கி.மீ வரை செல்லும். புதிய பஜாஜ் சேடக் ப்ளூ 3202 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.15 லட்சமாகும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பஜாஜ் சேடக்கின் இந்த புதிய வேரியன்ட் ப்ளூ 3202 ஆகும். இந்த ஸ்கூட்டரின் சிறப்பு என்னவென்றால், இந்த மாடல் முந்தைய வகையை விட மலிவானது ஆகும். அதுமட்டுமில்லாமல், அந்த வகைகளை விட அதிக வரம்பையும் தருகிறது.
25
Bajaj Auto
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 137 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டது என்று நிறுவனம் கூறுகிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேடக் ப்ளூ 3202 வேரியண்டுடன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் சேடக்கின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.15 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது.
35
Bajaj Chetak Features
சேடக் ப்ளூ 3202 விலை அதன் அர்பேன் வேரியன்ட்டை விட ரூ.8 ஆயிரம் குறைவு. அதே நேரத்தில், இதன் பிரீமியம் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.48 லட்சம். மற்ற ஸ்கூட்டர்களைப் போலவே, இந்த பஜாஜ் ஸ்கூட்டரும் கூடுதல் விலையில் TecPac உடன் வருகிறது. ஸ்கூட்டருடன் இதை வாங்குவதன் மூலம், EV உடன் அதிக அம்சங்களைப் பெறுவீர்கள். இந்த மின்சார ஸ்கூட்டரில் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், USB சார்ஜிங் போர்ட் போன்ற பல அம்சங்களையும் கொண்டுள்ளது.
45
Bajaj Chetak Blue 3202 Price
இந்த சேடக் ஸ்கூட்டரின் வரம்பை அதிகரிக்க ஸ்போர்ட் மற்றும் கிரால் மோடுகளுடன் ஈகோ மோடும் சேர்க்கப்பட்டுள்ளது. பஜாஜ் சேடக் ப்ளூ 3202 சந்தையில் இருக்கும் மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்க வந்துள்ளது என்றே கூறலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது இந்திய சந்தையில் ஏற்கனவே இருக்கும் ஏத்தர் ரிஸ்ட்டா, ஓலா மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக உள்ளது.
55
Bajaj Chetak Blue 3202
சந்தையில் இந்த ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது பஜாஜ் ஆட்டோ இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. 2000 ரூபாய் மட்டுமே டோக்கன் தொகையுடன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய முடியும். இந்த ஸ்கூட்டர் நான்கு வண்ண வகைகளில் சந்தையில் கிடைக்கிறது. புரூக்ளின் பிளாக், சைபர் ஒயிட், இண்டிகோ மெட்டாலிக் மற்றும் மேட் கோர்ஸ் கிரே நிறம் ஆகியவை இதில் அடங்கும்.