எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பதைத் தடுக்க என்ன செய்யணும்? இதை மட்டும் மறந்துறாதீங்க!

First Published | Sep 2, 2024, 6:09 PM IST

மின்சார வாகனங்களில் தீ ஆபத்து ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஆனால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பதைத் தடுக்க சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

EV maintenance

பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்கள் போல இல்லாமல் மின்சார வாகனங்கள் லித்தியம்-அயன் அல்லது ஈய-அமில பேட்டரிகளில் இயங்குகின்றன. மின்சார வாகனங்களில் தீ ஆபத்து ஏற்படும் வாய்ப்பு குறைவு. ஆனால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பதைத் தடுக்க சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

Sunlight

நேரடி சூரிய ஒளியில் அல்லது வெப்பமான சூழலில் மின்சார வாகனத்தை நிறுத்துவதையும் பயணிப்பதையும் தவிர்க்கவும். மின்சார வாகனங்கள் இயங்கும்போது அவற்றில் உள்ள லித்தியம்-அயன் பேட்டரி அதிக வெப்பமடைகிறது. இதனால், வெப்பமான சூழலில் இருக்கும்போது தீ விபத்து ஏற்படக்கூடும். எனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குளிர்ந்த காற்றோட்டமான இடத்தில் நிறுத்துவது நல்லது.

Latest Videos


Charging

மின்சார ஸ்கூட்டரை ஓட்டிவந்த உடனேயே பேட்டரியை சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும். குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகு ஸ்கூட்டரை சார்ஜ் செய்யவும். இது EVயில் உள்ள பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் பேட்டரியைக் குளிர்விக்க உதவும்.

Use original charger

எப்போதும் அசல் சார்ஜரை மட்டும் பயன்படுத்தவும். டூப்ளிகேட் EV சார்ஜரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உற்பத்தியாளர் வழங்கிய ஒரிஜினல் EV சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சார்ஜர் பழுதானாலும் சந்தையில் மலிவாகக் கிடைக்கும் மற்ற சார்ஜர்களை வாங்கி பயன்படுத்தக் கூடாது. அவை பேட்டரியில் பிரச்சினையை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக பேட்டரி சேத அடையவும் தீப்பற்றவும் வாய்ப்பு உண்டு.

Battery Safety

பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பேட்டரி புதுகாப்பாக பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை வாகனத்தில் இருந்து எடுத்து தனியாக வைத்து சார்ஜ் செய்லாம். இது வசதியாக இருந்தாலும், சார்ஜ் செய்ய பேட்டரியைக் கழற்றும்போது, சேதம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பேட்டரியை பாதுகாப்பான இடத்தில் வைத்து சார்ஜ் செய்ய வேண்டும்.

click me!