ரூ. 83,000 விலையில் அறிமுகமாகிறது புதிய டெஸ்டினி 125? பட்டைய கிளப்பும் புது டிசைன்!

First Published | Sep 2, 2024, 3:52 PM IST

ஹீரோ நிறுவனத்தின் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது. ரூ.83000 விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Hero Destini 125

புதிய வசதிகளுடன் Hero Destini 125

மாறுபட்ட புதிய டிசைன் மற்றும் நவீன வசதிகளுடன் Hero Destini 125 ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. ஏற்கனவே இருக்கும் Hero Destini 125 ஸ்கூட்டரின் டிசைன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது வெளியாக விருக்கும் Hero Destini 125 ஷார்ப்பான டிசைன் இல்லாமல், கிளாசியான டிசைன் மற்றும் பாடி லாங்குவேஜுடன் Hero Destini 125 ஸ்கூட்டரை ஹீரோ வெளியிட உள்ளது.

Hero Destini 125

லேட் அப்டேட் கொடுக்கும் Hero Destini 125

தற்போது விற்பனையில் இருக்கும் Destini 125 ஸ்கூட்டரை 6 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது. கடந்த 6 ஆண்டுகளில் எத்தனையோ புதுவித ஸ்கூட்டர்கள் மற்றும் புகையில்லா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு வந்துவிட்டன. ஆனால், டெஸ்டினி 125 ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம் பெரிய அளவில் எந்தவொரு அப்டேட்டும் செய்யவில்லை.

Tap to resize

Hero Destini 125

Hero Destini 125 என்ஜின்

தற்போது விற்பனையில் இருக்கும் Hero Destini 125 ஸ்கூட்டரில் 9.1hp பவர் மற்றும் 10.4Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 124.4 CC ஏர்-கூல்டு என்ஜினைக் கொண்டுள்ளது. புதிய Hero Destini 125 ஸ்கூட்டரிலும் இதே என்ஜினையே அந்நிறுவனம் பயன்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு பின் இந்த ஸ்கூட்டரை அப்டேட் செய்வதால், என்ஜினை சற்று நவீனப்படுத்தி மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது.

Hero Destini 125

புதிய வசதிகள்?

தற்போதைய டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் பத்து இன்ச் வீல் தான் கொண்டுள்ளது. மேலும், டிஸ்க் பிரேக் அமைப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகும் மற்ற வகை ஸ்கூட்டர்களில் 12 இன்ச் வீல்கள் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக் அம்சத்துடன் வருகிறது. எனவே, புதிய Hero Destini 125 ஸ்கூட்டரில் இந்த இரண்டு வசதிகளையும் ஹீரோ நிறுவனம் அப்டேட் செய்யும் எனத் தெரிகிறது.

Hero Destini 125

Hero Destini 125 விலை

மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் Hero Destini 125 ரூ.80,048 என்ற தொடக்கவிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது புதிய Hero Destini 125 இதனை விட சற்றுக் கூடுதல் விலையில் வெளியாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய Hero Destini 125 ரூ.83000 விலையில் இருக்கும் என மோட்டா உலக வட்டராத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sports Bike | 5 லட்சத்திற்குள் கிடைக்கும் சீறிப்பாயும் ஸ்போர்ட்ஸ் பைக்ஸ் இதோ!
 

Latest Videos

click me!