மாருதியின் மொத்த உள்நாட்டு பயணிகள் வாகன மொத்த விற்பனையானது கடந்த ஆகஸ்ட் 2024ல் 1,43,075 யூனிட்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டின் அதே மாதத்தில் சுமார் 1,56,114 யூனிட்கள் விற்பனையான நிலையில், சுமார் 8 சதவீதம் சரிவை கண்டுள்ளது மாருதி நிறுவனம். குறிப்பாக மாருதியின் பேசிக் மாடல் கார்களின் விற்பனையில் தான் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.