பட்ஜெட்டுக்குள், குடும்பத்துடன் ட்ராவல் செய்ய சிறந்த 7 சீட்டர் கார்களைப் பற்றிய லிஸ்ட் இங்கே!

Ansgar R |  
Published : Sep 02, 2024, 07:03 PM ISTUpdated : Sep 02, 2024, 09:29 PM IST

Affordable 7 Seater Cars : இந்தியாவில் 7 பேர் வரை குடும்பத்துடன் பயணிக்க பொருந்தும் பட்ஜெட்டில் உள்ள சிறந்த கார்கள் இப்போது உங்கள் பார்வைக்காக

PREV
14
பட்ஜெட்டுக்குள், குடும்பத்துடன் ட்ராவல் செய்ய சிறந்த 7 சீட்டர் கார்களைப் பற்றிய லிஸ்ட் இங்கே!
Mahendra bolero neo

மஹிந்திரா பொலிரோ நியோ இந்தியாவின் பிரபலமான 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். இது 100 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க்கையும் உருவாக்கக்கூடிய திறன் கொண்டது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இது இயக்கப்படுகிறது. பொலிரோ நியோ லிட்டருக்கு 17.4 கிமீ மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலைகயில், இந்தியாவில் சுமார் ரூ. 9,64,000 என்ற விலையில் விறபனையாகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடிப்பதைத் தடுக்க என்ன செய்யணும்? இதை மட்டும் மறந்துறாதீங்க!

24
Suzuki Ertiga

இந்தியாவில், மாருதி சுசுகி எர்டிகா மிகவும் பிரபலமான ஏழு இருக்கை வாகனங்களில் ஒன்றாகும். மலிவு விலை, நல்ல மைலேஜ் மற்றும் விசாலமான உட்புற அமைப்புக்கு பெயர் பெற்றது. எர்டிகாவின் விலை சுமார் ரூ. 8,64,000 ஆகும். எர்டிகா 105 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் கொண்ட இந்த கார் சுமார் லிட்டருக்கு 24.52 கிமீ மைலேஜை தருகிறது.

34
Renault Triber

ரெனால்ட் ட்ரைபர் அதன் ஸ்டைலான வடிவமைப்புக்காக, கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த கார் லிட்டருக்கு சுமார் 18.1 kmpl மைலேஜ் தரும் என்று குறைப்படுகிறது. ட்ரைபரின் ஆரம்ப விலை சுமார் ரூ. 6,33,500 ஆகும். 

44
Toyota Rumion

டொயோட்டா ரூமியன் ஸ்டைலான டிசைன் மற்றும் சிறப்பான இன்டீரியரைக் கொண்டுள்ளது. குறைந்த விலை, பட்ஜெட்டுக்கு ஏற்ற ஒரு பேமிலி காராக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல வாடிக்கையாளர்களின் அன்றாட பயன்பாட்டிற்கு இது ஒரு நல்ல தேர்வாகும். இந்த காரின் ஆரம்ப விலை சுமார் ரூ. 10,29,000 ஆகும்.

உங்க பட்ஜெட் 4 லட்சம் தானா? அதிரடி விலை குறைப்பில் உங்களுக்காக காத்திருக்கு Maruti Alto K10 - முழு விவரம்!

Read more Photos on
click me!

Recommended Stories