புல்டோசரின் உண்மையான பெயர் தெரியுமா? மைலேஜ் இவ்வளவுதான் தருமா?

First Published | Sep 3, 2024, 2:48 PM IST

புல்டோசர்கள் கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த இயந்திரங்கள். அவற்றின் உண்மையான பெயர் யாருக்கும் தெரிவதில்லை. புல்டோசர்கள் பெரும்பாலும் ஜேசிபி என்றே பலரும் அழைக்கின்றனர். மேலும் அவற்றின் எரிபொருள் செயல்திறன் மணிநேரத்திற்கு டீசல் நுகர்வு அடிப்படையில் அளவிடப்படுகிறது.

Bulldozer Original Name

புல்டோசர் ஒரு சக்திவாய்ந்த இயந்திரம் ஆகும். ஆனால் சக்திவாய்ந்த இயந்திரம், அதாவது மெஷின் என்று அனைவருக்கும் தெரியும். புல்டோசர் என்றாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு பேவரைட்டான வாகனம் என்றே கூறலாம்.

இது தோண்டுவதற்கும், குப்பைகளை அகற்றுவதற்கும் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்போதெல்லாம் புல்டோசர் என்ற வார்த்தை மிகவும் பிரபலமானதாகவே இருக்கிறது. ஆனால் அதன் உண்மையான பெயர் உங்களுக்குத் தெரியுமா? பலருக்கும் புல்டோசரை பற்றி தெரிவதில்லை.

புல்டோசர் என்ற பெயரை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள். குறிப்பாக சட்டவிரோத கட்டுமானம் அல்லது ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, ​​புல்டோசர் மூலம் இடிக்கப்படுகிறது.

Bulldozer

 புல்டோசர் நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நடந்து வருகிறது. அதன் அடுத்த விசாரணை செப்டம்பர் 17, 2024 அன்று நடைபெறும். ஆனால் புல்டோசர் அதன் உண்மையான பெயர் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? மற்ற வாகனங்களுடன் ஒப்பிடும்போது இதன் மைலேஜும் வித்தியாசமாக அளவிடப்படுகிறது. 

இந்தியாவில் அதிக புல்டோசர்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர் ஜேசிபி. ஆனால் பலருக்கும் புல்டோசர் என்றாலே ஜேசிபி தான் என்று நியாபகம் வரும்.

Latest Videos


JCB

மஞ்சள் புல்டோசரில் ஜேசிபி (JCB) பிராண்ட் பெயர் கருப்பு நிறத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பார்ப்பது மிகவும் பொதுவானது. இது தவிர மற்ற நிறுவனங்களும் புல்டோசர்களை விற்பனை செய்கின்றன.

சந்தையில் பல வகையான புல்டோசர்கள் கிடைக்கும். அவற்றின் திறன், மைலேஜ், விலை போன்றவற்றுக்கு இடையே வேறுபாடு உள்ளது. புல்டோசரின் உண்மையான பெயர் பேக்ஹோ லோடர். புல்டோசர்கள் அல்லது பேக்ஹோ ஏற்றிகளுக்கு 'மைலேஜ்' என்ற சொல் சற்று வித்தியாசமான முறையில் பயன்படுத்தப்படுகிறது.

Bulldozer Mileage

கார்கள் அல்லது பைக்குகள் போல், அவற்றின் மைலேஜ் லிட்டருக்கு கிலோமீட்டர்களில் அளவிடப்படுவதில்லை. அதற்கு பதிலாக, புல்டோசர் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு டீசல் பயன்படுத்துகிறது என்பதுதான் அது. புல்டோசர் ஒரு மணி நேரம் இயங்கும் போது அதன் டீசலின் அளவு அதன் மைலேஜ் ஆகும்.

நாம் ஒரு சாதாரண புல்டோசரைப் பற்றி பார்க்கையில் அது ஒரு மணி நேரம் இயங்கும் போது சுமார் 4-5 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேக்ஹோ லோடர் எவ்வளவு டீசல் பயன்படுத்துகிறது என்பது பல காரணிகளைப் பொறுத்தது ஆகும்.

Backhoe Loader

வெவ்வேறு மாடல்களில் வெவ்வேறு இயந்திரங்கள் உள்ளன, எனவே அவற்றின் எரிபொருள் நுகர்வு மாறுபடும். அதேபோல பேக்ஹோ லோடர் அதிக வேலை செய்ய வேண்டியிருந்தால், அது அதிக டீசலை உட்கொள்ளும்.

நிலம் கடினமாக இருந்தால், பேக்ஹோ லோடர் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இது டீசல் நுகர்வு அதிகரிக்கும். முக்கியமான விஷயம் என்னவென்றால், நன்கு பராமரிக்கப்படும் இயந்திரம் குறைந்த டீசலை உட்கொள்ளும்.

ஜேசிபி புல்டோசரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.35 லட்சத்தில் இருந்து தொடங்கும். ஆர்டிஓ மற்றும் பதிவுக் கட்டணம் போன்றவற்றுக்குப் பிறகு இதன் விலை மேலும் அதிகரிக்கும்.

ஹோண்டா ஆக்டிவா vs டிவிஎஸ் ஜூபிடர்: அதிக மைலேஜ்.. பெரிய ஸ்டோரேஜ் - எந்த ஸ்கூட்டர் சிறந்தது?

click me!