முன்பு பிரீமியம் பைக்குகளில் மட்டுமே இருந்த குரூஸ் கண்ட்ரோல் அம்சம், இப்போது ஹீரோ கிளாமர் எக்ஸ், எக்ஸ்ட்ரீம் 125R போன்ற மலிவு விலை மாடல்களிலும் கிடைக்கிறது. இது பட்ஜெட் ரைடர்களுக்கு ஒரு பெரிய மாற்றமாகும்.
இப்போது பைக் வாங்கும் போது மக்கள் இன்ஜின் சக்தி, மைலேஜ் அல்லது லுக் மட்டும் பார்த்து முடிவு செய்யவில்லை. அதற்கு இணையாக அம்சங்களும் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. முன்பு பெரிய டூரிங் பைக்குகளில் மட்டுமே கிடைத்த குரூஸ் கண்ட்ரோல் இன்று மலிவு விலை மாடல்களிலும் கிடைக்கிறது என்பது ஒரு பெரிய மாற்றம். நீண்ட நெடுஞ்சாலைப் பயணங்களில் கை எடுக்கவும், வேகத்தை தானாகவே பராமரிக்கவும் உதவும் இந்த அம்சம், தற்போது பட்ஜெட் ரைடர்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது பிரபலமாக உள்ளது.
25
டிவிஎஸ் அப்பாச்சி RTR 310
இந்தியாவில் கார்னரிங் குரூஸ் கண்ட்ரோல் வழங்கும் முதல் பைக் இதுவே. விலை ரூ.2.21 லட்சம் முதல். முன்பு இது நாட்டின் கம்மி விலை குரூஸ் கண்ட்ரோல் பைக் என்ற பட்டம் பெற்றது. இப்போது அந்த இடத்தை கிளாமர் எக்ஸ் பிடித்தாலும், RTR 310-ன் அம்சங்கள் இன்னும் பிரீமியமாகவும் தனித்துவமாகவும் உள்ளது. வளைவுகளின் போது வேகத்தை தானாக மாற்றும் குரூஸ் கண்ட்ரோல் பொதுவாக மிக உயர்நிலை பிரீமியம் பைக்குகளில் மட்டுமே கிடைக்கும்.
35
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V
160 சிசி திறன் கொண்ட இந்த பைக்கின் விலை ரூ.1.34 லட்சம் முதல். இந்த பட்டியலில் ஹீரோவின் மூன்றாவது மாடல் இதுவே. டாப் வேரியண்ட் குரூஸ் கண்ட்ரோல், ரைடு-பை-வயர் டிராட்டில், ரெயின்-ரோடு-ஸ்போர்ட் ரைடிங் மோடுகள், புதிய எல்சிடி திரை, மேம்பட்ட சுவிட்ச்கியர் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த விலையில் இத்தகைய அம்சங்கள் அரிதாகக் கிடைக்கின்றன.
இந்தியாவில் குரூஸ் கண்ட்ரோல் கொண்ட மிக மலிவு விலை பைக் இதுவே. விலை ரூ.83,000 முதல் தொடங்குகிறது. 125 சிசி கம்யூட்டர் பிரிவில் முதல் முறையாக குரூஸ் கண்ட்ரோலை அறிமுகப்படுத்தி ஹீரோ பெரிய அதிரடி கொண்டுவந்துள்ளது. பட்ஜெட்டில் தினசரி பயணிக்கும் பயனர்களுக்கு பண மதிப்பை வழங்கும் வகையில் முக்கியமான அப்டேட் இது.
55
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R
ஸ்போர்ட்டி 125 சிசி செக்மென்டில் அம்சங்களால் முன்னிலை வகிக்கும் மாடல் இது. விலை ரூ.1.04 லட்சம் முதல். கிளாமர் எக்ஸ்க்குப் பிறகு, இம்மாடலிலும் குரூஸ் கண்ட்ரோல் சேர்க்கப்பட்டுள்ளது. ரைடு-பை-வயர், டூயல் சேனல் ABS, Power-Road-Eco என மூன்று ரைடிங் மோடுகள், கலர் எல்சிடி திரை ஆகியவை இதை மேலும் மேம்படுத்துகின்றன.