மஹிந்திரா எப்போதுமே கார் ஆர்வலர்களுக்கான பிராண்டாக பெயர் பெற்றது என்றே கூறலாம். பெரிய அளவிலான எஸ்யூவிகள், ஸ்பெஷல் எடிஷன்கள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கான ரைடு-ஆன் கார்களும் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதே வரிசையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட BE6 Formula E எடிஷன் வடிவமைப்பை கொண்டு, புதிய மின்சார ரைடு-ஆன் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது செய்யப்பட்டது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற இந்த BE6 ரைடு-ஆன் கார், அதன் வடிவமைப்பிலேயே சிறப்பு என்பதையே முதல் பார்வையில் உணரலாம்.
வெளிப்புறத் தோற்றத்திலேயே BE6 Formula E கார் மாடலைப் போன்ற LED ஹெட்லைட்களும், ரியர் லைட்களும் வழங்கப்பட்டுள்ளன. கதவுகள் திறக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டதால், குழந்தைகள் எளிதாக உள்ளே நுழையவும், வெளியே வரவும் முடியும். உள்ளமைப்பு பகுதியிலும் நிஜ கார் மாதிரி போல காட்சி அளிக்கும் ஃபோக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன் பானலும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் ‘டிரைவிங்’ அனுபவத்தை விளையாட்டாக அல்லாமல் உண்மையான சாகசமாக உணருவார்கள்.