அதிக பேர் வாங்கும் மலிவான கார்கள் இதுதான்.. ராக்கெட் வேகத்தில் மாருதி விற்பனை

Published : Jan 02, 2026, 04:58 PM IST

2025 டிசம்பரில் மாருதி சுசுகி 2.17 லட்சம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. இந்த மாபெரும் வளர்ச்சிக்கு, நிறுவனத்தின் மலிவு விலை கார்களான ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

PREV
14
குறைந்த விலை கார்கள்

2025 டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி இந்திய சந்தையில் கனிசமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்தது. அந்த மாதத்தில் மட்டும் நிறுவனம் 2.17 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 டிசம்பரில் பதிவான 1.78 லட்சம் யூனிட்களுடன் ஒப்பிடும்போது பெரிய உயர்வாகும். குறிப்பாக, நிறுவனத்தின் மலிவான கார் பிரிவில் உள்ள ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ மாடல்கள் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரண்டு மினி-செக்மென்ட் கார்களும் சேர்த்து 14,225 யூனிட்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்து 7,418 யூனிட்களைவிட இருமடங்கு வளர்ச்சியை கண்டுள்ளன. ஆல்டோ ரூ.3.50 லட்சம் முதலிலும், எஸ்-பிரஸ்ஸோ ரூ.3.70 லட்சம் முதலிலும் கிடைப்பது இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

24
மாருதி ஆல்டோ

மாருதி ஆல்டோ K10 புதுப்பிக்கப்பட்ட ஹார்ட்டெக்ட் பிளாட்ஃபாரத்தை உருவாக்கியுள்ளது. இதில் 1.0 லிட்டர் K-சீரிஸ் டூயல் ஜெட், டூயல் VVT பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 66.62 PS பவர் மற்றும் 89 Nm டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மைலேஜ் விஷயத்தில், மேனுவல் வேரியன்ட் லிட்டருக்கு 24.39 கி.மீ, ஆட்டோமேட்டிக் வேரியன்ட் 24.90 கி.மீ வரை தருவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவுக்கு 33.85 கி.மீ மைலேஜ் வழங்குகிறது.

34
பட்ஜெட் கார்கள்

ஆல்டோ கே10-ல் 7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிலே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ப்ளூடூத், யூஎஸ்பி போன்ற வசதிகள் உள்ளன. ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல்ஸ், ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஈபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீட் சென்சிங் டோர் லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இதில் வழங்கப்படுகின்றன. இந்த கார் பல வண்ணங்களிலும் கிடைக்கிறது.

44
மாருதி எஸ்-பிரஸ்ஸோ

மாருதி எஸ்-பிரஸ்ஸோ 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது 68 PS பவர் மற்றும் 89 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் விருப்பங்கள் இதில் உள்ளன. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு சுமார் 24–24.76 கி.மீ மைலேஜ் தருகிறது; சிஎன்ஜி வேரியன்ட் ஒரு கிலோவுக்கு 32.73 கி.மீ மைலேஜ் வழங்குகிறது. 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட், டிஜிட்டல் கிளஸ்டர், கீலெஸ் என்ட்ரி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஸ்டெபிலிட்டி புரோகிராம் போன்ற அம்சங்களுடன், குறைந்த விலையில் அதிக வசதிகள் தரும் காராக எஸ்-பிரஸ்ஸோ வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories