மொத்தமாக 2026 நிதியாண்டில் (இதுவரை), ராயல் என்ஃபீல்டு 9,21,098 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 27% வளர்ச்சியாகும். இதில் உள்நாட்டு விற்பனை 8,21,908 யூனிட்கள் என பதிவாகி, 26% ஆண்டு வளர்ச்சியை கண்டுள்ளது. ஏற்றுமதி விற்பனையும் 99,190 யூனிட்களாக உயர்ந்து, 34% வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மாதந்தோறும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், சர்வதேச சந்தைகளில் பிராண்டின் வளர்ச்சி தொடர்வதை இது காட்டுகிறது.
சர்வதேச சந்தைகளில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ராயல் என்ஃபீல்டு நேபாளத்தில் மேம்படுத்தப்பட்ட ஹண்டர் 350 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஸ்ட்ரீட்-ஸ்டைல் வண்ணங்கள், மேம்பட்ட எர்கோனாமிக்ஸ், புதுப்பிக்கப்பட்ட பின்புற சஸ்பென்ஷன் மற்றும் ஸ்லிப்-ஆண்ட்-அசிஸ்ட் கிளட்ச் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. டிசம்பர் மாத செயல்திறன் குறித்து நிறுவன நிர்வாகம் கருத்து தெரிவிக்கையில், “2025 ஆம் ஆண்டு வலுவான வளர்ச்சியும், ரைடிங் சமூகத்துடன் ஆழ்ந்த உறவும் கொண்ட ஒரு நினைவுகூரத்தக்க ஆண்டாக அமைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.