ஹோண்டா கார்ஸ் இந்தியா, தனது பிரபலமான செடான் காரான ஹோண்டா சிட்டியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை 2026ம் ஆண்டு மே 22 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. அதில் பல முக்கிய அப்டேட்கள் வரவிருக்கின்றன.
இந்தியாவின் பிரீமியம் செடான் மார்க்கெட்டில் வலுவான இடத்தைப் பிடித்துள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா, தனது பிரபலமான ஹோண்டா சிட்டி காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது. இந்த புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட், வரும் 2026 மே 22 அன்று இந்திய சந்தையில் அறிமுகமாகும். ஐந்தாம் தலைமுறை சிட்டி அறிமுகமான பிறகு வரும் முதல் பெரிய அப்டேட் இது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தையில் வோக்ஸ்வேகன் Virtus, ஸ்கோடா Slavia, மற்றும் ஹுண்டாய் Verna போன்ற கார்களிடமிருந்து கடும் போட்டியைச் சந்திப்பதால், இந்த அப்டேட் மூலம் தனது நிலையை மேலும் வலுப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
24
அதே டிசைன் தொடரும்
டிசைனைப் பொறுத்தவரை, புதிய ஹோண்டா சிட்டியில் பெரிய மாற்றங்கள் இருக்காது. காரின் அடிப்படை கட்டமைப்பு அப்படியே தொடரும். ஆனால், ஒரு ஃப்ரெஷ் மற்றும் மாடர்ன் லுக் கொடுப்பதற்காக சில சிறிய மாற்றங்கள் செய்யப்படும். இதில், புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பர்கள், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லேம்ப்ஸ், புதிய அலாய் வீல்கள் போன்றவை இருக்கலாம். ஆனாலும், காரின் பக்கவாட்டுத் தோற்றத்திலோ அல்லது அதன் வடிவத்திலோ எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
34
காரின் உள்ளேதான் பெரிய மாற்றங்கள்!
இந்த முறை காரின் உட்புறத்தில்தான் ஹோண்டா அதிக கவனம் செலுத்த உள்ளது. புதிய சிட்டியில், புதிய சாஃப்ட்வேருடன் கூடிய பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், வென்டிலேட்டட் முன்பக்க சீட்கள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுதவிர, டிரைவிங்கை பாதுகாப்பானதாக மாற்றும் ADAS (Advanced Driver Assistance System) வசதியும் மேலும் மேம்படுத்தப்படலாம். காருக்கு ஒரு பிரீமியம் லுக் கொடுப்பதற்காக, கேபினில் புதிய அப்ஹோல்ஸ்டரியும் பயன்படுத்தப்படலாம்.
இன்ஜினைப் பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது எனத் தெரிகிறது. புதிய ஹோண்டா சிட்டியிலும் 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜின் சுமார் 121 குதிரைத்திறன் சக்தியையும், ஹைப்ரிட் மாடல் சுமார் 126 குதிரைத்திறன் சக்தியையும் வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களாக மேனுவல் மற்றும் சிவிடி (ஆட்டோமேட்டிக்) ஆகியவை தொடரும். விலையைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் போட்டித்தன்மையுடன் நிர்ணயிக்க நிறுவனம் முயற்சிக்கும். ஒட்டுமொத்தமாக, புதிய ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட், டிசைன், அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு சிறந்த பேக்கேஜாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.