இந்த கடும் கோடையில் கார் ஏசி சரியாக குளிர்விக்காதது பலருக்கும் பொதுவான பிரச்சனை. ஆனால் சில எளிய பழக்கங்களை மாற்றினாலே, ஏசியின் செயல்திறனை அதிகரிக்க முடியும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
இந்தியாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக கோடைக்காலங்களில், ஏசி இல்லாத கார் பயணம் ஒரு சவாலாகவே மாறுகிறது. ஆனாலும், பலர் அறியாமலேயே செய்யும் சில தவறுகள் காரணமாக ஏசியின் குளிர்ச்சி குறைந்து, எஞ்சினுக்கும் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. சில எளிய பழக்கங்களை மாற்றினால், உங்கள் கார் ஏசி மதிப்பை உயர்த்த முடியும்.
25
ஏசி குளிர்ச்சி அதிகரிக்க
முதலில் கவனிக்க வேண்டியது வெயிலில் நிறுத்திய காரின் உள்ளே சூடான காற்றை வெளியேற்றுவது. நேரடியாக ஏசியை ஆன் செய்வதற்குப் பதிலாக, ஒரு நிமிடம் கதவுகள் அல்லது ஜன்னல்கள் வைத்தால், உள்ளே தேங்கிய வெப்பம் வெளியேறும். இதனால் ஏசி உடனடியாக அதிக சுமையின்றி வேலை செய்ய ஆரம்பிக்கும்.
35
கார் ஏசி சரி செய்வது
அடுத்ததாக, கார் ஸ்டார்ட் செய்தவுடன் ஏசியை முழு குளிர்ச்சியில் இயக்க வேண்டாம். முதலில் சில நிமிடங்கள் வண்டியை இயக்கி, பிறகு ஏசியை மெல்ல ஆன் செய்வது சிறந்த நடைமுறை. இதனால் கம்ப்ரசர் திடீர் அழுத்தமின்றி, நீண்டநாள் நல்ல நிலையில் இருக்கும். மேலும், ரீசர்குலேஷன் மோடு பயன்படுத்துவது கேபினை விரைவாக குளிர்விக்க உதவும். ஆனால் நீண்ட நேரம் தொடர்ந்து இதைப் பயன்படுத்துவது காற்றின் தரத்தை பாதிக்கலாம் என்பதால் இடைவேளைகளில் வெளியக காற்றையும் அனுமதிக்க வேண்டும்.
பராமரிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டக் கூடாது. ஏர் ஃபில்டர் சுத்தமாக உள்ளதா, குளிரூட்டும் கேஸ் அளவு சரியாக உள்ளதா, எங்காவது லீக் இருக்கிறதா என்று காலந்தோறும் சரிபார்க்க வேண்டும். முறையான சர்வீஸ் செய்தால், ஏசி செயல்திறன் மட்டுமல்ல, எரிபொருள் சேமிப்பும் கிடைக்கும்.
55
கார் குளிர்ச்சி டிப்ஸ்
இறுதியாக, காரை நிறுத்தும் இடமும் முக்கியம். எப்போதும் நிழலான இடத்தில் பார்க்க முயற்சிக்கவும். இது காரின் உள்ளக வெப்பநிலையைக் குறைத்து, ஏசி அதிகமாக உழைக்க வேண்டிய அவசியத்தைத் தடுக்கிறது. இந்த சின்ன சின்ன டிப்ஸ்களை பின்பற்றினால், கடும் வெயிலிலும் உங்கள் கார் பயணம் குளிர்ச்சியாகவும் சுகமாகவும் இருக்கும்.