Tata Punch, Fronx மீது பெரிய தள்ளுபடி.. ஏப்ரல் 30க்குள் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.. எவ்வளவு?

Published : Apr 28, 2026, 12:55 PM IST

ஏப்ரல் மாதத்தில் டாடா பஞ்ச் மற்றும் மாருதி சுசுகி ப்ராங்ஸ் போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகைகள் மூலம் ரூ.30,000 வரை சேமிக்கலாம்.

PREV
15
கார் ஆஃபர்கள்

புதிய எஸ்யூவி வாங்க நினைக்கிறவர்களுக்கு ஏப்ரல் மாதம் ஒரு ‘கோல்டன் விண்டோ’ மாதிரி இருக்கிறது. மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் கவர்ச்சியான சலுகைகளை அறிவித்ததால், குறைந்த செலவில் நல்ல காரை வாங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக டாடா பஞ்ச் மற்றும் மாருதி சுசுகி ப்ராங்ஸ் போன்ற மாடல்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் வாங்குபவர்களை அதிகமாக ஈர்க்கின்றன.

25
ஏப்ரல் கார் தள்ளுபடிகள்

இந்த மாதத்தில் காஷ் டிஸ்கவுண்ட், எக்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் ஆஃபர்கள், ஸ்க்ராபேஜ் சலுகைகள் என பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. இந்த சலுகைகளை சரியாக பயன்படுத்தினால், ஆயிரக்கணக்கில் பணம் சேமிக்க முடியும். குறிப்பாக, பழைய காரை மாற்ற நினைப்பவர்களுக்கு இது நல்ல டீல் ஆகும்.

35
டாடா பஞ்ச்

டாடா பஞ்ச் வாங்குபவர்களுக்கு காஷ் டிஸ்கவுண்ட் மற்றும் எக்சேஞ்ச் போனஸ் சேர்த்து சுமார் ரூ.15,000 வரை நன்மை கிடைக்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த தொகை மாடல் மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறலாம். மேலும் மாருதி ப்ராங்ஸ்-க்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை மொத்த சலுகைகள் கிடைக்கலாம். இதில் எக்சேஞ்ச், கார்ப்பரேட், ஃபைனான்ஸ் ஆஃபர்கள் அடங்கும்.

45
சுசுகி ப்ராங்ஸ்

விலை அடிப்படையில் பார்த்தால், டாடா பஞ்ச் சுமார் ரூ.5.50 லட்சத்தில் தொடங்குகிறது. குறைந்த பட்ஜெட்டில் எஸ்யூவி தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. மறுபக்கம், ப்ராங்ஸ் சுமார் ரூ.6.85 லட்சத்தில் தொடங்கி, அதிக அம்சங்களுடன் சிறிய பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. இரண்டு மாடல்களும் வேரியண்ட் மற்றும் நகரத்தைப் பொறுத்து விலை வேறுபடும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

55
எக்சேஞ்ச் போனஸ்

மேலும், குறைந்த வட்டி விகிதத்தில் லோன், எளிய இஎம்ஐ திட்டங்கள், பழைய காருக்கு கூடுதல் போனஸ் போன்ற பல சலுகைகளும் கிடைக்கின்றன. இந்த சலுகைகள் ஏப்ரல் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும். அதனால் தாமதிக்காமல் முடிவு எடுத்தால், சிறந்த டீலைப் பிடிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories