Astrology: இந்த 5 ராசிக்காரர்கள் கர்ணனின் மறு உருவம்.! உதவின்னு கேட்ட உசுரை கூட குடுப்பாங்களாம்.! உங்க ராசி இருக்கா?

Published : Jan 07, 2026, 03:22 PM IST

Zodiac signs who love to help others: குறிப்பிட்ட 5 ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பிலேயே உதவும் மனப்பான்மை அதிகமாக இருக்குமாம். அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
Zodiac signs that help others the most

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொருவருடைய குணாதிசயங்கள் அவர்கள் பிறந்த ராசி மற்றும் அந்த ராசியை ஆளும் கிரகங்களின் படி அமைகிறது. எல்லா ராசிக்காரர்களிடமும் ஏதாவது ஒரு நற்குணங்கள் இருந்தாலும் சில ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்டுள்ளார்களாம். பிறர் துன்பப்படுவதை கண்டால் அவர்களுக்காக வருந்துவார்களாம். பிறரின் துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் ஓடிச் சென்று உதவுவார்களாம். அப்படி உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட ராசிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இங்கு பார்க்கலாம்.

26
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதை கடமையாக கருதுகின்றனர். இவர்களை சேவையின் சின்னம் என்று அழைக்கலாம். இவர்கள் ஒருவரின் தேவையை அறிந்து அவர்களுக்கு தேடித் தேடிச் சென்று உதவி செய்வார்கள். நாம் உதவி செய்தால், நமக்கு அவர்கள் உதவி செய்வார்கள் என்பது போன்ற எந்த பிரதிபலனும் பார்க்க மாட்டார்கள். ஒருவர் சிக்கலில் இருந்தால் வெறும் ஆறுதல் மட்டும் செல்லாமல், அந்த சிக்கலில் இருந்து எப்படி வெளிவருவது என்ற நடைமுறை வழியை காட்டுவார்கள்.

36
கடகம்

சந்திரன் ஆளும் கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தாயுள்ளம் கொண்டவர்கள். மற்றவர்கள் படும் கஷ்டத்தை தன் கஷ்டமாக பாவிப்பார்கள். பசியால் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பதிலும், ஆதரவற்றவர்களுக்கு புகலிடம் தருவதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே. மற்றவர்களுக்கு ஒரு மனக்கஷ்டம் என்றால் முதல் ஆளாக நின்று தோள் கொடுப்பார்கள். ஒருவர் கஷ்டப்படும் பொழுது அதை மேலோட்டமாக மட்டும் பார்க்காமல் ஆழமாகச் சென்று அவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உதவிகளையும், ஆறுகளையும் வழங்குவார்கள்.

46
மீனம்

மீன ராசிக்காரர்கள் குரு பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்களுக்கு ஞானம், அறிவு, தர்ம சிந்தனை அதிகம். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தங்கள் சொந்த விருப்பங்களை கூட தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். வாயில்லா ஜீவன்கள் முதல் மனிதர்கள் வரை அனைவரிடமும் கருணையுடன் நடந்து கொள்வார்கள். தமக்கு தீங்கு செய்தவர்களுக்குக் கூட அவர்கள் கஷ்டப்படும் பொழுது ஓடிச்சென்று உதவி செய்யும் பரந்த உள்ளம் இவர்களுக்கு உண்டு. சுயநலமின்மை, கருணை, மன்னிக்கும் குணம் ஆகியவற்றை தங்கள் உயிர் மூச்சாக நினைப்பார்கள்.

56
தனுசு

குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் தர்ம சிந்தனையாளர்கள். பண உதவியை விட ஒருவருடைய வாழ்க்கையை மேம்படுத்த நல்ல ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் அறிவையும் வழங்குவதில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். யாரேனும் கஷ்டப்படுவதை பார்த்தால் தங்களிடம் பணம் இல்லாத போது கூட பிறரிடம் வாங்கி அவர்களுக்கு கொடுத்து உதவுவார்கள். தர்ம காரியங்கள், பொது சேவைகள் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். பிறருக்கு அநீதி நடப்பதைக் கண்டால் அவர்களுக்காக வாதாடி நீதியை பெற்றுத் தருவார்கள்.

66
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தனி மனிதர்களை விட சமூகத்திற்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உலகத்தைப் பற்றிய புரிதல் இவர்களிடம் அதிகமாக இருக்கும். அன்பால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அதிகமாக உணர்ந்து இருக்கிறார்கள். இவர்கள் ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற விரும்புவார்கள். பொதுநல அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சமூகத்திற்காக உழைப்பார்கள். தான் எவ்வளவு வறுமையில் வாடினாலும், தன் கையில் பணம் இல்லாத போதும் ஒருவர் உதவி கேட்டு வந்தால் அவர்களுக்காக ஓடோடிச் சென்று உதவுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories