பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வங்கா. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் உலக நடப்புகளை முன்கூட்டியே கணித்த தீர்க்கதரிசி என அழைக்கப்படுகிறார். 1996 ஆம் ஆண்டு இவர் மறைந்தாலும் எதிர்காலம் குறித்து அவர் கூறிச் சென்ற கருத்துக்கள் இன்றளவும் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
அவரது பல கணிப்புகள் உண்மையாகி இருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு குறித்து அவர் கூறியுள்ளதாக கருதப்படும் முக்கிய கணிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் உலக அளவில் மிகப்பெரிய போர் தொடங்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். அவர் கணிப்புகளிலேயே மிகவும் அச்சமூட்டும் விஷயமாக இது பார்க்கப்படுகிறது. அவர் கணிப்புபடியே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக அதிகாரம் மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆசியாவை நோக்கி குறிப்பாக சீனாவை நோக்கி நகரும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
உலக நாடுகளிடையே நிகழ்ந்து வரும் மோதல்கள் குறுகிய கால மோதல்களுக்குப் பதிலாக நீடித்த அரசியல் உறுதியற்ற தன்மைக்கு வழி வகுக்கலாம் என்று பாபா வங்கா கூறியிருக்கிறார். எனவே 2026-ல் மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் எழுந்துள்ளது.
தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) 2026 இல் மிகப்பெரிய எழுச்சி பெரும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். இயந்திரங்கள், ரோபோக்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நிலைக்கு செல்லலாம் என்றும், மனிதர்கள் இயந்திரங்களை சார்ந்து வாழும் நிலை அதிகரிக்கும் என்று அவர் கூறி இருக்கிறார்.
மேலும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி வேலை வாய்ப்புகள் மற்றும் மனித உறவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், மனித வாழ்க்கையின் முக்கிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்தும் நிலையை அடையக்கூடும் என்று பாபா வங்கா எச்சரித்திருப்பதாக கூறப்படுகிறது.
2026 ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை சீற்றங்களை உலகம் சந்திக்கும் என்று பாபா வங்கா எச்சரித்துள்ளார். பூமியின் நிலப்பரப்பில் 7% முதல் 10% வரை பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை சீற்றங்களால் பாதிக்கப்படலாம் என்று அவர் கூறியிருக்கிறார். கடுமையான வெள்ளம், வறட்சி போன்ற காலநிலை மாற்றங்கள் உலகெங்கிலும் ஏற்படும் என்றும், பூமியின் நிலப்பரப்பு 7% முதல் 8% வரை பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
2026 ஆம் ஆண்டில் பொருளாதார மந்த நிலை மற்றும் நிதியில் உறுதியற்ற தன்மை ஏற்படும் என்று பாபா வங்கா எச்சரித்து இருக்கிறார். பண நெருக்கடி, நாணய சீர்குலைவுகள், சந்தை சரிவுகள் அதிகரித்து வரும் பண வீக்கம் ஆகியவை அடங்கும். உலகப் பொருளாதார கடும் வீழ்ச்சியை சந்திக்கும், வங்கிகள் முடங்கும், கரன்சி மதிப்பு வீழ்ச்சியடையும், பணவீக்கம் காரணமாக கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும் என பாபா வங்கா கூறியுள்ளார். தங்கத்தின் விலையும் 25% முதல் 48% வரை உயரும் என்று அவர் கணித்துள்ளார்.
மனித வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளான ஏலியன்களுடன் தொடர்பு ஏற்படுத்துவார்கள் என்று பாபா வங்கா கணத்துள்ளார். விண்வெளியில் இருந்து மிகப்பெரிய மர்மமான விண்கலம் ஒன்று பூமியின் வளிமண்டலத்திற்கு நுழையும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த விண்கலானது எனப்படும் விண்கலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரத்தில் வீழ்ச்சி ஏற்படும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். 2026 இல் ரஷ்யாவிற்கு புதிய மற்றும் சக்தி வாய்ந்த ஒருவர் தலைவராக கிடைப்பார் என்று பாபா வங்காணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாபா வங்கா தனது கணிப்புகளை எழுத்துப்பூர்வமாக விட்டு செல்லவில்லை. அவர் வாய்மொழியாக கூறிய கருத்துக்கள் அவரது சீடர்களால் குறிப்பெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் பல்வேறு நபர்களின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் இவற்றை அப்படியே உண்மையாக கருத தேவையில்லை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)