Published : Jan 07, 2026, 10:47 AM ISTUpdated : Jan 07, 2026, 04:32 PM IST
Chaturgrahi Yog Lucky Zodiac Signs: வேத நாட்காட்டியின்படி பிப்ரவரி 2026 கும்ப ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்க இருக்கின்றனர். இதனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி புத்தாண்டு தொடங்கியது முதல் பல கிரகங்களின் பெயர்ச்சிகள், இணைப்புகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் பிப்ரவரியில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் கும்ப ராசியில் ஒன்றாக இணைகின்றனர். கும்ப ராசியானது சனி பகவானின் சொந்த வீடாகும். சனி பகவானின் வீட்டில் நடக்கும் இந்த சேர்க்கை சதுர்கிரக யோகத்தை உருவாக்க இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
24
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக யோகம் மிகவும் மங்களகரமானதாகவும், சாதகமான சூழலையும் உருவாக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கை உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாவது வீட்டில் உருவாகும். இந்த வீடு ‘அதிர்ஷ்ட ஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். கடினமான பணிகளையும் கூட எளிதாக முடிப்பீர்கள். உங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவிப்பீர்கள். சிறிய முதலீடுகள் கூட மிகப் பெரிய லாபத்தைத் தரும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், உத்திகளும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
34
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக யோகம் பயனுள்ளதாகவும், சாதகமாகவும் இருக்கும். இது உங்கள் ராசியில் இருந்து நான்காவது வீட்டில் உருவாகும். நான்காவது வீடு ‘சுக ஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் பொன், பொருள், வசதிகள், ஆடம்பரங்களை அனுபவிப்பீர்கள். ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களை முடிப்பீர்கள். வேலை மற்றும் தொழிலில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக மாறும். கணவர், மாமனார், மாமியார் ஆகியோருடனான உறவு மேம்படும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக யோகம் புனிதமானதாகவும், நன்மை பயப்பதாகவும் இருக்கும். இந்த பெயர்ச்சி உங்கள் ஜாதகத்தின் லக்ன ஸ்தானத்தில் நடக்கும். இதன் விளைவாக உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். புதிதாக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன்கள் கைகூடும். தந்தை உடனான உறவு மேம்படும். தந்தை அல்லது தாய் வழியில் இருந்த பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். உங்கள் படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தால் பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)