Thai Matha Rasi Palangal 2026: ஜனவரியில் முக்கிய கிரக பெயர்ச்சி.! பொங்கலுக்குப் பின் 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம்.!

Published : Jan 07, 2026, 11:49 AM IST

Sukra Peyarchi Palangal in Tamil: சுக்கிர பகவான் மகர சங்கராந்திக்கு முன் மகர ராசிக்குள் நுழைகிறார். இதனால் சில ராசிகளுக்கு சிறப்புப் பலன்கள் கிடைக்கவுள்ளது. அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம். 

PREV
15
மேஷம்

சுக்கிரன் 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், மேஷ ராசிக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும். எதிர்பாராத பண லாபம் உண்டாகும். சமூகத்தில் மரியாதை கூடும். தொழில் வாழ்க்கையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, கார் வாங்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும்.

25
ரிஷபம்

சுக்கிரன் 9ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், அதிர்ஷ்டம் துணை நிற்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் கைக்கு கிடைக்கலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்,.

35
கடகம்

சுக்கிரன் 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், புதிய இடங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு உண்டு. சுகபோகங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு அல்லது செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்டகால உடல் உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

45
கன்னி

சுக்கிரன் 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் பெருகும். நிதி நிலையில் முன்னேற்றம், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகள் மேம்படும். ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் அதிகரிக்கும்.

55
மகரம்

சுக்கிரன் உங்கள் ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். ஆளுமைத் திறன் மேம்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் அல்லது பொன் பொருள் சேர்க்கை நடக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம், புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories